கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் துகள்கள் மூலம் ‘தென்னை தட்டுகள்’ தயாரிப்பு: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்

By வி.சுந்தர்ராஜ்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் தென்னை மரங்களை அறுத்து அதிலிருந்து கிடைக்கும் துகள்களை ஒருமுறை உபயோகப் படுத்தும் தட்டுகளாக தயாரித்து வருகிறது இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் காரணமாக 65 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பல ஆண்டுகளாக தென்னையை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்கால கனவுகளும் ஒரே நாளில் சிதைந்தது. புயல் வீசிய பகுதிகளில் தென்னந்தோப்புகளில் கீழே கிடந்த மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். மரங்களை அகற்ற தமிழக அரசு, மரம் ஒன்றுக்கு ரூ.500-ஐ நிவாரணமாக அறிவித்தது. இருந்தாலும் பல இடங்களில் தென்னை மரங்களை அகற்ற கூடுதல் செலவானது.

வேறு வழியில்லாமல் கீழே கிடந்த தென்னை மரங்களை பார்க்க மனமில்லாமல் விவசாயிகள் பலர் தென்னை மரங்களை தீயிட்டு கொளுத்தியும், தென்னந்தோப்புகளில் குழிதோண்டி புதைத்தும் வந்தனர்.

இதற்கிடையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த செங்கல் சூளை நடத்துபவர்கள் தென்னைமரங்களை மிகவும் குறைந்த விலைக்கு தென்னை விவசாயிகளிடம் வாங்கினர். எப்படியாவது கீழே விழுந்த மரங்களை அகற்றினால் போதும் என்ற மனநிலையில் விவசாயிகளும் தென்னை மரங்களை வியாபாரிகளிடம் வழங்கினர்.

இதற்கிடையில் தென்னை மரங்களை இயந்திரம் மூலம் அகற்றவும், தென்னை மரங்களை அறுத்து, தூள் தூளாக்கும் இயந்திரத்தை தமிழக அரசு வாடகைக்கு வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தென்னை மரங்களை துகளாக்கி, மீதமுள்ள தென்னை மரங்களுக்கு உரமாக்கி வருகின்றனர் விவசா யிகள்.

இந்நிலையில் தான் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தினர், தென்னை மர துகள்களை கொண்டு, ‘ஒருமுறை உபயோகப்படுத்தும் தட்டுகள்’ தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் சி.அனந் தராமகிருஷ்ணன் கூறியதாவது: பட்டுக்கோட்டை பகுதியில் பேராவூரணியில் அதிகம் விளையக்கூடிய தென்னையை கொண்டு பல்வேறு மதிப்புகூட்டும் பொருட்கள் செய்யலாம் என கடந்தாண்டு திட்டமிட்டு அங்குள்ள விவசாயிகளை சந்தித்து பேசினோம். ஆனால் கஜா புயல் தாக்கியபோது அங்கு சென்ற எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கிட்டதட்ட பல லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 30-40 ஆண்டுகளாக வளர்த்த தென்னைமரங்கள் எல்லாம் ஒரே நாளில் வீழ்ந்தன. இந்த மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் நாங்களும் சில திட்டமிடல் களை நடத்தி பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை இயந்திரம் மூலம் அறுத்து அதனை துகளாக்கி தற்போது பேப்பர் பிளேட் செய்யும் இயந்திரத்தில் “தென்னை தட்டுகள்” செய்துள்ளோம். இந்த தட்டுகளில் தின்பண்டங் களை சாப்பிட முடியும். இந்த தட்டுகளை தற்போது ரூ.3-க்கு விற்க முடிவு செய்துள்ளோம். இந்த விலையை மேலும் குறைத்து, அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுவரை நாம் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டுகளுக்கு மாற்றாக இந்த “தென்னை தட்டுகளை” பயன்படுத்த முடியும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்