திருப்பரங்குன்றம் தொகுதியை பல பகுதிகளாக பிரித்து புதிய நிர்வாகிகளை திமுக நியமித்துள்ளது. அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நாளிலேயே ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங் கியது கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் மாவட்டங்கள், ஒன்றியங்கள் 2 அல்லது 3-ஆக பிரித்து புதிய பொறுப்பாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே நியமிக்கப்பட்டனர். இந்த மாற்றம் மதுரை மாநகர், மாவட்டத்தில் மட்டும் நடக்காமல் இருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றில் இத்தொகுதியில் திமுக 3-ம் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை, தொகுதியை திமுகவுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ளும்படி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்டச் செயலாளர்கள் எம்.மணிமாறன் (தெற்கு), எம்.மூர்த்தி (வடக்கு) ஆகியோருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அமமுக திருப்பரங்குன்றம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த வி.வேட்டையன் உள்ளிட்ட சிலரை திமுகவில் இணைய வைத்தனர். மேலும் சாதி வாரியாகப் பகுதிகளைப் பிரித்து, அந்தந்த சாதியைச் சேர்ந்த நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் கிழக்கு, மேற்கு, தெற்கு என 3-ஆக பிரிக்கப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் பகுதி, அவனியாபுரம் பகுதி தலா 2 ஆக பிரிக்கப்பட்டது. வார்டு 56-ம் 2-ஆக பிரிக்கப்பட்டது. இதன் மூலம் புதிதாக 3 ஒன்றியப் பொறுப்பாளர்கள், 2 பகுதி பொறுப்பாளர்கள், 1 வார்டு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமமுக.வில் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த வி.வேட்டையன் கடந்த பிப்.7-ம் தேதி காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அன்று மாலையிலேயே, வேட்டையனுக்கு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ஆண்டுக்கணக்கில் காத்திருப்போருக்கெல்லாம் பதவி கிடைக்காத நிலையில், ஒரே நாளில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கட்சிப் பொறுப்பு வழங்கும் அளவுக்கு கட்சி வேகமாக இயங்குவது உண்மை எனில், இதேபோல் காலியாக உள்ள பதவிகளை, வேகமாகச் செயல்படும் நிர்வாகிகளைக்கொண்டு உடனே நிரப்ப வேண்டும். மேலும் இடைத்தேர்தலை மனதில் வைத்து திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் மேற்கொண்ட மாற்றத்தை, மாவட்டத்திலுள்ள இதர 9 தொகுதிகளிலும் உடனே செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும், என்றனர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் விவரம்:டி.கல்லுப்பட்டி ஒன்றியப் பொறுப்பாளராக பாப்பையாபுரத்தைச் சேர்ந்த எம்.ஞானசேகரன் நியமிக்கப் பட்டுள்ளார். ஏற்கெனவே ஒன்றியச் செயலாளராக இருந்த மு.மணிமாறன் தெற்கு மாவட்டச் செயலாளரானதால் இப்பதவி காலியாக இருந்தது. திருப்பரங்குன்றம் ஒன்றியம்: கிழக்கு பொறுப்பாளராக பனையூர் சி.தனபால், மேற்கு பொறுப்பாளராக விளாச்சேரி வி.பெரியசாமி, தெற்கு பொறுப்பாளராக பாரப்பத்தியைச் சேர்ந்த வி.வேட்டையன் ஆகியோர் நியமிக்க ப்பட்டுள்ளனர்.
பகுதிச் செயலாளர்கள்: திருப்பரங் குன்றம் வடக்குப்பகுதி பொறுப்பாளராக க.கிருஷ்ணபாண்டி, தெற்குப் பகுதி பொறுப்பாளராக திருநகர் எஸ்.பி.எம்.சிவா, அவனியாபுரம் கிழக்குப்பகுதி பொறுப்பாளராக ஐராவதநல்லூர் கே.செந் தாமரைக்கண்ணன், அவனியாபுரம் மேற்குப்பகுதி பொறுப்பாளராக வில் லாபுரம் பி.ஈஸ்வரன் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். அவனியாபுரம் வார்டு 56-ஐ இரண்டாகப் பிரித்து ஒரு பகுதிக்கு(56) பொறுப்பாளராக மேல அனுப்பானடியைச் சேர்ந்த மு.போஸ், 56 (அ) வார்டு பொறுப்பாளராக மேல அனுப்பானடியைச் சேர்ந்த கே.மணி சேகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் கிழக்கில் இடம் பெறும் ஊராட்சிகள் விவரம்: சிலைமான், புளியங்குளம், விரகனூர், பெருங்குடி, சூரக்குளம் என 9 ஊராட்சிகள்.
மேற்கில் வடபழஞ்சி, கரடிப்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, வேடர்புளியங்குளம், தனக் கன்குளம், தோப்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகள். தெற்கில் நல்லூர், சோளங்குருணி, பாரப்பத்தி, எலியார்பத்தி, வலையங்குளம், நெடு மதுரை, ஒத்த ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், வலையபட்டி, நிலையூர் 1, 2 (கருவேலம்பட்டி) ஆகிய 12 ஊராட்சிகள். திருப்பரங்குன்றம் வடக்குப் பகுதியில் மதுரை மாநகராட்சி வார்டு 94,95,96-ம் தெற்கு பகுதியில் வார்டுகள் 97,98,99 ஆகியவையும், அவனியாபுரம் கிழக்கு பகுதியில் வார்டுகள் 55,56,56 (அ),58-ம், தெற்குப் பகுதியில் 59,60,61,62 ஆகிய வார்டுகளும் இடம் பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago