தூத்துக்குடியில் 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும், எந்தவித பணிகளும் தொடங்கப்படாமல் திட்டம் முடங்கி கிடக்கிறது.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்கு துறைமுகம், அரசு மற்றும் தனியார் அனல்மின் நிலையங்கள், பல்வேறு தனியார் தொழிற்சாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள், உப்பளங்கள் உள்ளன. இவற் றில் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) பதிவு செய்யப்பட்டவர்கள். அவர் களுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்கும் வகையில் தூத்துக்குடி யில் இஎஸ்ஐ மருந்தகம் செயல் பட்டு வருகிறது.
2014-ல் அடிக்கல்
இந்த மருந்தகத்தில் சாதாரண நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். தொழிலாளர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டு மானால் திருநெல்வேலியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்.
தொழிலாளர்கள் அதிகம் உள்ள தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத் துவமனை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. இதனை ஏற்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இஎஸ்ஐ மருத் துவமனை அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தில் இஎஸ்ஐ மருத்து வமனை கட்ட கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.106 கோடி மதிப் பீட்டில் 100 படுக்கை வசதி கொண்ட அதிநவீன மருத்துவமனை அமைக்க அப்போதைய மத்திய தொழிலாளர் நலத்துறை இணை யமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அதன்பின்னர் 5 ஆண்டு கள் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. அடிக்கல் நாட்டியதற்கான அடிச்சுவடு கூட இல்லாமல் அந்த இடம் செடி கொடிகள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது.
தொழிலாளர்கள் பாதிப்பு
இதுகுறித்து சிஐடியூ மாநில செயலாளர் ஆர்.ரசல் கூறியதாவது:
திருநெல்வேலியை விட தூத்துக்குடியில் தான் தொழிலா ளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், இங்கு இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும் வரவில்லை. அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படாமல் கிடப் பில் போடப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், அதற்கான தொகையை இஎஸ்ஐ நிறுவனத் திடம் இருந்து பெறுவதில் பல் வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றார் அவர்.
2.5 லட்சம் பேர் பயன்பெறுவர்
இஎஸ்ஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவது தொடர்பாக தனியார் கன்சல்டன்ட் நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் நிலை வந்துள்ளது. எனவே, விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும். தற்போது திட்ட மதிப்பீடு ரூ.160 கோடி வரை உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மருத்துவ மனை மூலம் 60 ஆயிரம் தொழிலா ளர்கள் மற்றும் அவர்களது குடும் பத்தினர் என சுமார் 2.5 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்” என்றார் அவர்.
சிப்காட் நோட்டீஸ்
இஎஸ்ஐ நிறுவனத்துக்கு சிப்காட் வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு கடந்த 1989-ம் ஆண்டே கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்தில் கடந்த 29 ஆண்டுகளாக எந்த பணிகளும் செய்யாததால் இஎஸ்ஐ நிறு வனத்துக்கு சிப்காட் நிறுவனம் கடந்த ஒரு மாதத்துக்கு முன் விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு இஎஸ்ஐ சார்பில் அனுப்பிய பதிலில், இஎஸ்ஐ மருத் துவமனை திட்டம் தற்போது டெண்டர் விடும் கட்டத்தில் உள்ளது. எனவே, இன்னும் 6 மாதத்தில் பணிகளை தொடங்கிவிடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிப்காட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago