நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி அமையும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

By செ.ஞானபிரகாஷ்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவரும், மஹாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வந்தார். புதுச்சேரியில் ஆதி திராவிட மற்றும் பிற்பட்டோருக்கான கல்வி உதவி, வன்கொடுமை தடுப்பு சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். திமுக அதிக கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கிறது.

அதனால், தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும்.  ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இணைந்த இரு அணிகளும் பாஜக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்