கிரண்பேடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லிக்கு ரயிலில் காங்கிரஸ், திமுக மற்றும் கட்சியினர் இன்று புறப்பட்டனர். முதல்வரின் போராட்டம் வெற்றிபெற்ற வாழ்த்துகள் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மாநில அந்தஸ்து, ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தரில் வரும் 4-ம் தேதி காங்கிரஸ்,திமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் கூட்டணிக் கட்சிகள், அமைப்புகள் 4- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.இதில் பங்கேற்க புதுச்சேரியில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் ரயிலில் இன்று டெல்லி புறப்பட்டனர். அவர்களை முதல்வர் நாராயணசாமி, ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.
வாழ்த்து சொன்ன கிரண்பேடி
டெல்லி போராட்டம் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "என்னை திரும்பப் பெறக்கோரி வரும் 4- ம் தேதி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். டெல்லி செல்வோர் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வர வேண்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும், நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago