அலங்காநல்லூரில் போராட்ட நினைவுத் தூண்: ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ் பெறப்படுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை மீட்கப் போராடிய மாணவர்கள், பொதுமக்களை கவுரவப்படுத்தும் வகையில் நினை வுத் தூண் அமைக்க முதல்வர் கே. பழனிசாமியிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்தபோது, அதை மீறி அலங்காநல்லூரில் மக்கள் கடந்த 2017-ம் ஆண்டு வாடி வாசலில் காளைகளை அவிழ்த்து விட்டனர். அதனால் போலீஸார் அலங்காநல்லூர் மக்களை கைது செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

இதுதெடார்பாக அலங்கா நல்லூர் மக்கள், மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரித்து வருகிறார். நேற்று இவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட்டார்.

 அப்போது அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்ற விதிகளை பின்பற்றி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தினர். காளைகள் துன்புறுத்தப்படவில்லை. பரிசுகள் பிளாஸ்டிக் மயமாக உள்ளது. பரிசுகளை இன்னும் தரமாக வழங் கலாம். ஜல்லிக்கட்டு கலவரம் தொடர் பாக இந்த மாத கடைசியில் மதுரையில் மீண்டும் விசாரிக்க உள்ளேன். விரைவில் ஜல்லிக்கட்டு கலவரம் சம்பந்தமான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதை போலீஸார்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு உரிமையை அதிமுக அரசுதான் பெற்றுக் கொடுத்தது. ஒட்டுமொத்த மாணவர்கள், பெண் கள், பொதுமக்களும் இந்த உரி மையைப் பெற காரணமாக இருந்தனர். அதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வரே நேராக வந்து கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

இதை அடுத்துவரும் தலை முறையினர் அறிவதற்காக, அதன் நினைவாக கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. உரிமைக்காக போராடிய மாணவர்கள், பொதுமக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த நினைவுத் தூண் வைக்க நடவடிக்கை எடுக்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்