திருவாரூர் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வாய்ப்பு யாருக்கு?- ஓர் அலசல்

By மு.அப்துல் முத்தலீஃப்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அந்தந்தக் கட்சி வட்டாரத் தகவல்கள் அடிப்படையில் பரிசீலனையிலுள்ள பெயர்கள் குறித்த பதிவு.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளரும் அவரே.

வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்ற கருணாநிதி கடந்த ஆகஸ்டு 8 அன்று காலமானதால், திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜன.28 அன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக, அதிமுக, அமமுகவுக்குள் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இங்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக திருவாரூர் கள நிலவரம் தெரிவிக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வாங்கிய வாக்குகளில் பாதி கூட பெறாத அதிமுக இப்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது, அதுவா எங்களை வெல்லும் என கடந்த தேர்தலில் கருணாநிதிக்கு தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி தற்போது வேட்பாளர் ஓட்டப்பந்தயத்தில் முன்னணியில் உள்ள பூண்டி கலைவாணன் அறிவாலயத்தில் பேட்டி அளித்துள்ளார்.

கணக்குப்படி இதை சரி என வைத்துக்கொண்டாலும், அதிமுக இரண்டாகப் பிளந்தும் திமுக அதிமுகவை அமமுக ஆர்.கே.நகரில் வென்ற முன்னுதாரணமும் உண்டு. ஆகவே கடைசி நேரப்பிரச்சாரம், கஜா புயல் உள்ளிட்ட பல அமசங்கள் தீர்மானிக்கப்போகும் இந்தத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக மூன்று கட்சிகளிடையே பலத்தபோட்டி நிலவுவதால் மூன்று கட்சிகளும் வலுவான வேட்பாளரை களம் இறக்க உள்ளன.

அந்த அடிப்படையில் திமுக வட்டாரத்தில் திமுக வேட்பாளர்களுக்கான விருப்ப மனு பெறப்படுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு அதை ஒட்டி விவாதங்கள் ஓடினாலும் கே.எஸ்.அதியமான் பட சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் உதயநிதி அதற்காக கடந்த டிசம்பர் மாத இறுதியில் பிஜி தீவுக்குச் சென்றார். தேர்தலுக்கு முதல் நாள்தான் அவர் சென்னை திரும்புகிறார்.

திமுக வட்டாரத்தில் திருவாரூரில் வலுவான வேட்பாளர் என்பதைத் தாண்டி அனுபவமிக்க வேட்பாளராக பூண்டி கலைவாணன் அனைவராலும் பார்க்கப்படுகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்காக தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர், ஆகவே பூண்டி கலைவாணன் தான் திமுக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதிமுக வேட்பாளராக திமுகவுக்கு போட்டியில் கடுமையாக சவால் கொடுக்கும் நபராக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைத்தியலிங்கம் பார்க்கப்படுகிறார். அவரை நிறுத்துவதன் மூலம் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியும் வெற்றியின் படிக்கட்டைத் தொட முடியும் என அதிமுக வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

பிரபலமானவர் என்பதால் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் தொகுதியாக மாறும் என்று பிரச்சாரம் வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஒரத்தநாடு தொகுதியில் நின்று கடந்தமுறை தோல்வியைத் தழுவினார் வைத்தியலிங்கம்.

அதன் பின்னர் அதன் காரணமறிந்து ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா. அவ்வாறு வைத்தியலிங்கம் நிறுத்தப்படாவிட்டால் திருவாரூர் ஒன்றியச்செயலாளர் பன்னீர்செல்வம் நிறுத்தப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்தான் கடந்த தேர்தலில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தவர்.

இதில் அமமுக வேட்பாளரைத்தான் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பார்க்கின்றன. அமமுக திருவாரூர் தொகுதியில் வலுவாக இருப்பதாக அமமுக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமமுகவில் ஏற்கெனவே குடவாசல் ராஜேந்திரன்தான் வேட்பாளர் என முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர் வலுவான வேட்பாளர் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்று கூறுகின்றனர்.

ஆனால் குடவாசல் ராஜேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் ஓடுகிறது. இதனால் தொகுதியில் செல்வாக்கு மிக்க காமராஜ் நிறுத்தப்படுவார் என்றும் கூறுகின்றனர். இவர் அமமுக மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவரும் திமுகவுக்கு வலுவான சவாலாக இருப்பார் என கூறுகின்றனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்