திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
திருவண்ணாமலை ரமணா நகர் எம்கேவி தெருவில் அருணை குழந்தைகள் காப்பகம் இயங்கி வந்தது. அங்கு தங்கி உள்ள 15 சிறுமிகளுக்கு காப்பக மேலாளர் வினோத்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், திருவண்ணாமலை நகர காவல்துறை மற்றும் அனைத்து மகளிர் காவல்துறையினர் பாதுகாப்புடன் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு கடந்த 29-ம் தேதி இரவு சென்று ஆய்வு செய்து, சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மற்றொரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து காப்பக மேலாளர் வினோத்குமாரைக் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago