தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக திருச்சி மத்திய சிறையில் மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் சிறைவாசிகள் மூலம் துணிப்பைகள் தயாரிக்கப்பட்டு வரு கின்றன.
ஒரு முறை மட்டுமே பயன்படுத் தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். வியாபாரிகளில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக் கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களிடத் தில் ஓரளவு வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் காரணமாக மளிகைக்கடை, காய்கறி சந்தைகளுக்குச் செல்லக் கூடிய பலர், கையோடு துணிப்பை கொண்டு செல்லத் தொடங்கி விட்ட னர். மேலும் சில ஜவுளிக் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங் களில் விற்கக்கூடிய பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கொடுப் பதற்கு பதிலாக, கடந்த காலங்களில் இருந்ததுபோலவே மீண்டும் துணிப் பைகளில் வைத்து நுகர்வோரிடம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இத னால் தமிழ்நாட்டில் துணிப் பைகளுக் கான தேவை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிறைவாசிகளுக்கும் வருவாய் கிடைக் கும் வகையில் திருச்சி மத்திய சிறை யில் உள்ள தையல் கூடத்தில் துணிப் பைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதையொட்டி இங்கு வழக்கமாக தயாரிக்கப்படும் காவலர்களுக்கான தொப்பி, சீருடை போன்றவற்றுக்கான பணிகள் தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 10 தையல் இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1,000 துணிப் பைகள் வரை சிறைவாசிகள் தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, "பிளாஸ்டிக் தடையை முழுவீச்சில் அமல்படுத்தும் முயற்சி யில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வரு கிறது. எனவே, தற்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் வணிகர்கள், நுகர்வோர் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக துணிப்பைக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படு வதுடன், துணிப்பை உற்பத்தி செய் வோருக்கும் நல்ல வருவாய் கிடைக் கும். இதன் பலன் திருச்சி சிறை யிலுள்ள சிறைவாசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத் தில் இந்த முயற்சி மேற்கொள் ளப்பட்டுள்ளது.
இங்கு சிறைவாசிகள் மூலம் முதற் கட்டமாக மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய 4 நிறங்களில் சிறிய ரகம், நடுத்தர ரகம், பெரிய ரகம் என்ற 3 வகைகளில் துணிப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. மஞ்சள் நிற பைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால், அவற் றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அடுத்தகட்டமாக மேலும் சில வண்ணங்களில் துணிப்பைகள் தயாரிக்கப்பட உள்ளன. கைத்தறி துணிகளை மட்டுமே பயன்படுத்தி இங்கு பைகள் தயாரிக்கப்படுகின்றன.
சிறை வாசலில் கைதிகளால் நடத் தக் கூடிய அங்காடியில், இந்த பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பையின் அளவைப் பொறுத்து ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. மொத்தமாக வாங்கினால் ரூ.7 முதல் ரூ.12 வரை கிடைக்கும்.
வெளிச் சந்தையைக் காட்டிலும் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறைவாசிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. ஆர்டர்கள் அதிகரித்து வருவதால் கைத்தறி துணியை திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற இடங் களில் இருந்து மொத்தமாக கொள் முதல் செய்வது குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago