அக்டோபர் 30-ம் தேதி ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்துகள், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி அவர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஆதிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்காக சுப்பிரமணியன் சுவாமி அக்டோபர் 30-ம் தேதி நேரில் ஆஜராகும் வகையில் அவருக்கு சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE