புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினரான டாக்டர்.வி.மைத்ரேயன், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மைத்ரேயன் கூறும்போது, பிரதமருக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையை விளக்கி நான் எழுதிய ’’பாவை முப்பது’ எனும் பக்தி நூலையும் பரிசாக அளித்தேன்.’ எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவக் கல்லூரியில் பயின்ற மைத்ரேயன் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் உறுப்பினராக இருந்தார். பிறகு பாஜகவில் இணைந்தவர் அதன் பொதுச்செயலாளர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.
கடந்த 1999 ஆண்டில் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்பட்டிருந்தார்.
மைத்ரேயனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பிரதமர் மோடியுடனான இவரது சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago