இனி எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்: கிரண்பேடி திட்டவட்டம்

By செ.ஞானபிரகாஷ்

இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன், தேர்தலில் யாருடனும் மோத விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாகவும், மேலும் அவர் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இருவேறு செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஆதிதிராவிட நலத்துறையில் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடியிடம் இதுபற்றி கேட்டதற்கு, "ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது வதந்தியாக இருக்கலாம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். நான் எப்போதும் ஒரு நிர்வாகியாக செயல்படவே விரும்புகிறேன். நான் அரசியல்வாதியில்லை. தேர்தலில் யாருடனும் மோத விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.

கிரண்பேடியின் இந்த பதில் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்