பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்று உயர் சாதி வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு சட்ட மசோதாமக்களவையிலும் மாநிலங்கள வையிலும் எளிதாக நிறைவேறியது.
இந்த மசோதாவின் மீது மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசும்போது கனிமொழி ஆட்சேபம் தெரிவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்:மாநிலங்களவையில் நீங்கள்பேசும்போது என்ன வலியுறுத் தினீர்கள்?மோடி ஆட்சிக் காலத்தின் கடைசி நேரத்தில் கொண்டுவரும் இந்த மசோதாவை எதிர்த்தீர்கள் என்றால் "நான் தருகிறேன் என்று சொன்னேன். அதை இவர்கள் எதிர்க்கிறார்கள்" என்று மோடி பேசுவார். அதை லட்சம் பேர் கேட்பார்கள். நாங்கள் நியாயமாகப் பேசினோம் என்றெல்லாம் சொல் லிக் கொண்டிருக்க முடியாது.
அரசுத் துறையில் வேலை குறைந்து கொண்டிருக்கிறது. பொதுத் துறைகளை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே தனியார் துறையில் தாங்கள் இப்போது கொடுக்கிற 10 சதவீதமும் ஏற்கெனவே உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும் என்று நான் தனியாக தீர்மானம் ஒன்று கொண்டு வந்தேன். அதை மொத்தமே 11 பேர் மட்டுமே ஆதரித்தார்கள். இதுபோன்ற இதர பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று 2014-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் பாஜக தேர்தல் அறிக்கையிலும் இருக்கிறது. மாநிலங்களவையில் 4 திமுகவினரில் 2 பேர்தான் வந்திருந்தனர். அவர்கள் இருவர் உட்பட 7 பேர்தான் எதிர்த்தனர். மற்றவர்களெல்லாம் மோடியை ஆதரிக்க வில்லை. தீர்மானத்தை ஆதரித்தார்கள்.
இந்த மசோதா மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா?இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டை வைத்து இந்தியா வைப் பார்க்கக் கூடாது. நாயுடுசமூகம் தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்ட சமூகம். ஆந்திரத்தில் முற்படுத்தப்பட்ட சமூகம். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் மாநிலத்துக்கு மாநிலம் இருக்கிறது. மசோதா நிறைவேறியதாலேயே மத்திய அரசு வேலை கொடுக்கப் போவதில்லை. அனைத்து வேலைவாய்ப் புகளும் சுருங்கிக் கொண்டு வருகிறது. எனவே, இந்த மசோதா மிகப்பெரிய மோசடியாகும்.
வருமான வரியில் உச்சவரம்பே இரண்டரை லட்சம் ரூபாய்தான். ரூ.8 லட்சம் ஆண்டு வருமானம் படைத்தவர் பொருளாதாரத்தில் நலிவடைந்தவரா, 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் என்றுசொன்னால் அது எந்தப் பகுதி, மும்பையில் உள்ள இடமும் ராமநாதபுரத்தில் உள்ள இடமும் மதிப்பு ஒன்றாகிவிடுமா. ஆகவேஅதையும் தெளிவாகக் குறிப்பிட வில்லை. எனவே, இந்த மசோதா ஒரு போலி ஏற்பாடு. இதை மக்கள் புரிந்து கொள்ள வெகுநாட்கள் ஆகும். இது முழுக்க வாக்கு வங்கி அரசியலுடன் சேர்ந்துள்ளது. மக்கள் நலத்துடன் இணைந்தது அல்ல.
தமிழகத்தில் திமுக, அதிமுக இதை எதிர்க்கிறதே?லோக்சபாவில் அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் அவர்கள் வெளியேற்றி விட்டார் கள். எந்த அரசாங்கம் இந்த மசோதாவைக் கொண்டு வந்ததோ அந்த அரசாங்கத்தின் பதவியில் ஓட்டிக் கொண்டிருக்கும் துணை சபாநாயகரான தம்பிதுரையும் வெளிநடப்பு செய்தார். பாஜக வின் அனுமதியுடன்தான் அதிமுக வினரின் வெளிநடப்பே நடக்கிறது. எம்ஜிஆர் ஆட்சியில் 80-களில் கிரீமிலேயர் முறை மார்க்சிஸ்ட்டுகள் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது. எம்ஜிஆர் மட்டுமல்ல, மண்டல் கமிஷனிலேயே கிரீமிலேயர் இருக்கிறது. அதைச் சொன்னாலே இந்த சமூக நீதிக்காரர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
இதனால் பிராமணர்களுக்குப் பலன் அதிகம் என்கிறார்களே?வடமாநிலங்களில் பார்த்தால்பிராமணர்களை விட மற்ற சமூகத்தினர்தான் முற்படுத்தப்பட்டவர் களாக அதிகம் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிராமணருடைய சதவீதம் ஒன்றரை சதவீதம் மட்டுமே. 98 சதவீதத்துக்காக ஒன்றரை சதவீதம் பாதிக்கட்டும். பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சைவ முதலியார்கள், வெள்ளாளர்கள், பிள்ளைமார்கள் உள்ளிட்ட பல சமூகத்தினர் பாதிக்கப்படுகிறார்களே.
கிரீமிலேயர் முறைக்கும் பாஜக அமல்படுத்தும் பத்து சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வித்தியாசம் எதுவும் உள்ளதா?இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. இது அமலாகப் போவ தில்லை என்பதை மட்டும்தான் நான் இப்போது சொல்ல முடியும். இதை எதிர்த்து தோற்கடித்தால் உங்களால்தான் அவர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று மோடி பேசுவார்.
இந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறதா?தீர்மானத்தை ஆதரித்துதான் வாக்களித்தோம். மோடி தேர்தலுக்காக வித்தை காட்டுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசித்தான் அத்தனை பேரும் ஆதரித்தார்கள். யாரும் மனப்பூர்வமாக மோடி முற்போக்காளர் ஆகிவிட்டார் என்று தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. எங்கள் கட்சி சார்பில் தீர்மானத்தின் மீது கேரள எம்.பி. கறீம் பேசினார். நான் பேசவில்லை. தீர்மானம் எவ்வாறு தவறு என சிறிது நேரம் முன்மொழிந்து மட்டுமே பேசினேன். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago