உதகையில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

By ஆர்.டி.சிவசங்கர்

உதகையில்  இரண்டாவது நாளாக நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

உதகையில் கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. உதகை  சுற்றுவட்டாரப் பகுதிகளான குதிரைப் பந்தய மைதானம், தலை குந்தா, எச்.பி.எப் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் இப்பகுதிகள் வெள்ளைப் போர்வை போல் காட்சியளித்தது.

திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது உறை பனி படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கும். இந்தாண்டு பனிப்பொழிவு வழக்கத்துக்கு மாறாக தாமதமாகும். ஜனவரி முதல் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் காலதாமதமாக உறை பனி தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள், விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும், இந்த உறை பனியினை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த பனிப்பொழிவு வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதகை தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. தாழ்வான பகுதிகளில் வெட்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்