‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக மதுரை எம்.பி.கோபாலகிருஷ்ணன், திரைக்குப் பின்னால் பல்வேறு காரியங்களைச் செய்தார். மதுரையைச் சேர்ந்த வர்த்தகர்கள், ‘எய்ம்ஸ்’க்காகப் போராடுபவர்களை, மத்திய அமைச்சர்களைச் சந்திக்க வைப்பது, மதுரைக்குச் சாதகமான அம்சங்களை பிரதமர் அலுவலகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் நேரில் கொண்டு வழங்குவதுமாக கடந்த 2 ஆண்டாக ‘எய்ம்ஸ்’க்காக எம்.பி. கோபாலகிருஷ்ணன், பல்வேறு ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்துள்ளார்.
அதனால், பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு இருந்த மரியாதையால் நேற்று ‘எய்ம்ஸ்’ விழாவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் தோப்பூர், மதுரை மக்களவைத் தொகுதிக்குட்டபட்டது இல்லை. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. ஆனாலும், யாருடைய சிபாரிசும் இல்லாமல் பிரதமர் பங்கேற்ற விழா மேடையிலும், விழா அழைப்பிதழலிலும் அவரது பெயர் இடம்பெற்றது. இதை, மதுரையைச் சேர்ந்த அதிமுகவினரே, பெருமையாகச் சொல்லி வருகின்றனர்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேச வாய்ப்பு வழங்கப்படாத துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேற்று ‘எய்ம்ஸ்’விழாவில் வரவேற்பு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.
நேற்று நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி புதிதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பாஜக அரசை பல்வேறு நிலைகளில் தொடர்ந்து விமர்ச்சித்து வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும், நேற்று நடந்த ‘எய்ம்ஸ்’ விழாவில் மேடையில் இருக்கை வழங்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நிகழ்ச்சி நடந்த மண்லேடா நகரில் ‘எய்ம்ஸ்’ அரசு விழா மற்றும் பாஜக கட்சி விழா ஆகிய இரு மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இரு விழாவிலும் செய்திகள் சேகரிக்க, புகைப்படம் எடுக்க, தனித்தனியே பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழா மேடைக்கு வலது புறம் பத்திரிகையாளர்களின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆனாலும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் செய்தியாளர்கள் கேலரிக்கு வந்து, மீண்டும் கேமரா பேக் உட்பட அவர்கள் வைத்திருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். இது சிலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தினாலும், பிரதமர் விழா என்பதால் பாதுகாப்பு அடிப்படையில் போலீஸார் எச்சரிக்கையாக இருப்பது கடமைதானே என, பத்திரிகையாளர்களே பேசிக்கொண்டனர்.
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழா தொடங்கிய பின், 12 மணிக்குள் முடியவேண்டும் என, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் குறித்த குறும்படத் தொகுப்பு வெளியிடுவதில் சற்று தாமதம் ஆனது போன்ற சில காரணத்தால் பகல் 12.28 மணிக்கு அரசு விழா முடிந்தது.
அரசு விழாவிற்கென ஏற்பாடு செய்திருந்த மேடையின் வலது புறம் அமைக்கப்பட்டு இருந்த வழியில் மேடைக்கு வந்தார். விழா முடிந்ததும், இடது புறமாக இறங்க ஒரு வழி ஏற்பாடு செய்திருந்தாலும், மேடைக்கு ஏறிய அதே வழியில் இறங்கினார். அங்கிருந்து அரசு விழா மேடையில் இருந்து, கட்சி விழாக்கு காரில் சென்றார்.
இ-வர்த்தகம் புரியும் பெண்ணைச் சந்தித்த பிரதமர்
மதுரை டிஆர்ஓ காலனியைச் சேர்ந்த அருண்மொழி சரவணன் என்ற பெண் அரசு இ-வர்த்தகம் (மார்க்கெட்டிங்) தொழில் புரிகிறார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன், இவர் பிரதமர் அலு வலகத்திற்கே தேவையான சில பொருட்களை வர்த்தகம் செய்தார். இவரது திறமையை பிரதமர் பாராட்டி, சமீபத்தில் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மதுரை அருண்மொழியை சந்திக்கத் திட்டமிட்டார். பிரதமரின் அறிவுறுத்தலில் நேற்று முன்தினமே மதுரை நகர் காவல்துறை பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப் பி, அவரை நேற்று காலை விழா நடக்குமிடத்திற்கு அழைத்து வரப்பட்டார். கட்சி பொதுக் கூட்ட மேடைக்கு அருகில் வைத்து, அருண்மொழியை சந்தித்துப் பேசினார். அவரது தொழில் விவரம் கேட்டறிந்த பிரதமர், அவரை ஊக்கப்படுத்தினார். மேலும், கல்வி உள்ளிட்ட சில துறையில் சிறந்து விளங்கும் 9 பேரையும் பிரதமர் பாராட்டி இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago