தி இந்து ஆபிஸ் அண்ட் நேஷனல் பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவராக இ.கோபால், பொதுச் செயலாளராக எம்.கமலநாதன் ஆகியோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தி இந்து ஆபிஸ் அண்ட் நேஷனல் பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகி கள் தேர்தல், சென்னையில் மார்ச் 31-ம் தேதி நடந்தது. தேர்தல் அதிகாரி ஜி.சிவராமன் தலைமையிலான 23 பேர் கொண்ட குழு, இந்தத் தேர்தலை சிறப்பாக நடத்தியது.
இந்தத் தேர்தலில் தலைவராக இ.கோபால், பொதுச் செயலாளராக எம்.கமலநாதன் ஆகியோர் தொடர்ந்து 3-வது முறையாக (2008, 2011, 2014) தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணைத் தலைவர்களாக எம்.தவசீலன், பி.ஆர்.பெருமாள், இணைச் செயலாளராக எஸ்.மார்டீன் தாமஸ், பொருளாளராக பி.ஜெயரத்தினம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுடன் வி.பிரேம்ஆனந்த், கே.ஸ்ரீதர், ஒய்.கே.லட்சுமிபதி, எம்.ஜோதி, எஸ்.ஏ.கார்த்திகேயன், எஸ்.சங்கரன், இ.மனோகர், கே.கணேசன், இ.செங்குட்டுவன், ஜி.ராஜேந்திரன், வி.சக்கரபாணி, டி.செல்வராஜ், எம்.கிருபாகரன், பி.சேகர், எம்.பாலசுப்பிரமணியன், டி.கார்த்திகேயன் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
யூனியன் அலுவலகத்தில் புதன் கிழமை (2-ம் தேதி) நடந்த தி இந்து ஆபிஸ் அண்ட் நேஷனல் பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியனின் பொதுக் குழுவில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் அனைவரும் ‘தி இந்து’ குழும தலைவர், இணை சேர்மன் மற்றும் இயக்குநர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தத் தேர்தலில் தலைவர் இ.கோபால், பொதுச் செயலாளர் எம்.கமலநாதன் தலைமையில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், 2017 வரை பொறுப்பு வகிப்பார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago