குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் முதல் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி வரை கடல் வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத் துக்கென தனி வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கப்பல்கள் அதிகளவு சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ள முடியும். இதற்கிடையே, இந்த வழித்தடம் அமைப்பதன் மூலம் தங்களது மீன் பிடித் தொழில் பாதிக்கும் என மீன வர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சரக்குக் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், குஜராத் மாநிலம் கட்ச் முதல் கன்னியாகுமரி வரை கடல் வழியாக கப்பல் போக்கு வரத்துக்கென கடலில் தனி வழித் தடத்தை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து இயக்கு நரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்துள்ள ‘சாகர் மாலா' என்ற திட்டத்தில் துறைமுகங் களை நவீனமயமாக்குதல், துறை முகங்களை ஒட்டி தொழிற்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடல் பகுதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும் வகை யில் பிரத்யேக வழித்தடம் அமைக்கப் பட உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் முதல் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி வரை அமைக்கப்படும் இந்த வழித்தடம் குஜராத், மகா ராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழியாக செல்லும்.
இந்த வழித்தடம் கடற்கரையில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில், 20 நாட்டிக்கல் மைல் அகலத்துக்கு அமைக்கப்படும். இதன் மூலம், துறைமுகங்களை ஒட்டியுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை கப்பல்கள் மூலம் எளிதாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதேபோல், தொழிற் சாலை உற்பத்திக்குத் தேவைப்படும் கச்சாப் பொருட்களும் வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டு விரைவாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு கொண்டு சேர்க்கப்படும். இதற்கான ஆலோ சனைகள் மற்றும் திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த தனி வழித் தடம் அமைப்பதன் மூலம் நடுக்கட லில் கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் அடிக்கடி மோதி விபத்துக் குள்ளாவது தவிர்க்கப்படும் என்றார்.
இதுகுறித்து, தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் ஆர்.வி. குமார வேலு கூறியதாவது:
கடற்கரையில் இருந்து 15 முதல் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில்தான் மீன்பிடித் தளங்கள் உள்ளன. இங்குதான் மீனவர்கள் மீன்பிடிப்பர். இந்நிலையில், இப்பகுதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கென தனி வழித்தடம் அமைத்தால் கடலில் மீன் உற்பத்தி செய்யப்படும் தடாகங்கள் அழியும். கடலுக்கடியில் உள்ள அரிய வகை உயிரினங்கள் அழியும். 85 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு அமைக்கப்படும் இந்த வழித்தட பகுதி யில் 86 சதவீத அளவுக்கு மீன்கள் கிடைக்கின்றன. இதனால், மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமும் அழியும் நிலை ஏற்படும்.
இத்திட்டம் குறித்து மீனவர்களுடன் இதுவரை எவ்வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை. அத்துடன், கப்பல்களில் இருந்து வௌியேறும் கழிவுகள், எண்ணெய் மற்றும் வாயு கசிவுகள் காரணமாக கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago