தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட முன்னோட்டமா?- 47 ஊராட்சி கூட்டங்களில் கனிமொழி பங்கேற்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் இன்று (ஜன. 18) முதல் வரும் 29-ம் தேதி வரை 12 நாட்களுக்கு நடைபெறும் 47 ஊராட்சி சபை கூட்டங்களில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகள்தோறும், ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாநில நிர்வாகி ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு பொறுப்பாளராக கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். முதல் நிகழ்ச்சியாக இன்று (ஜன. 18) மாலை 4 மணிக்கு, குறுக்குச்சாலை ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி பேசுகிறார்.

தொடர்ந்து 29-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி கலந்து கொள்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் 28 ஊராட்சி சபை கூட்டங்கள், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் 19 ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி கலந்து கொள்கிறார்.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட உள்ளதாக தகவல்பரவி வரும் நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்12 நாட்கள் கனிமொழி முகாமிட்டு, மக்களை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்