ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்: வயது 3, உயரம் 120 செ.மீ. இருந்தால் மட்டுமே தகுதிச் சான்று

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான காளை களுக்கு உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை நேற்று தொடங்கியது. இதில், 3 முதல் 8 வயதுக்குள் 200 செ.மீ. உயரமுள்ள காளை களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதிச்சான்று வழங் கப்பட்டது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு வரும் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் நடக் கிறது.

கடந்த ஆண்டு உள்ளூர் அரசியல் புள்ளிகள், அதிகாரி களின் பரிந்துரையின் பேரில் தகுதியில்லாத காளைகள் வாடிவாசலில் களம் இறக்கப்பட்ட தாக புகார் எழுந்தது. அதனால், ஒரு சில காளைகள் மட்டுமே வாடிவாசல் முன்பு நின்று விளையாடின. மற்ற காளைகள் வாடிவாசலில் மாடிபிடி வீரர்களைக் கண்டதும் மிரண்டு ஓடின.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்த, தகுதியில்லாத காளை களுக்கு உடல் தகுதிச்சான்று வழங்கப்படாது என கால்நடை பராமரிப்புத் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது.

இந்நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்குவதற்கான மருத்துவப் பரிசோதனை நேற்று முதல் தொடங்கியது. அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனை நடந்தது.

தகுதி நீக்கம்

கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் காளை களைப் பரிசோதனை செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உடல்திறன் தகுதிச்சான்று வரும் 12-ம் தேதி வரை வழங்கப்படும். ஆனால், முதல் நாளான நேற்றே தகுதிச் சான்று பெறுவதற்காக ஏராளமான காளைகளை, அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். இந்தப் பரிசோதனையில் நோய் பாதிப்புள்ள காளைகள், வயது குறைந்த காளைகள், கொம்பு, வால் சேதப்படுத்தப்பட்டிருந்த காளைகளை மருத்துவர்கள் தகுதி நீக்கம் செய்தனர்.

ஆதார், குடும்ப அட்டைகள்

காளையின் உரிமையாளர்கள் ஆதார், குடும்ப அட்டைகள் மற்றும் காளை வளர்ப்பவரின் புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வந்தவர் களின் காளைகள் மட்டுமே உடல் தகுதிப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து காளைகளைப் பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் சரவணன் கூறிய தாவது:

தகுதிச் சான்று பெற்ற காளைகள் மட்டுமே ஜல்லிக் கட்டில் பங்கேற்க முடியும். அவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் 3 வயது முதல் 8 வயது வரை இருக்க வேண்டும். 3 வயதுள்ள காளைகள் சராசரியாக 120 செ.மீ. வரை இருக்கும். இந்த உயரத்துக்குக் கீழும், வயது குறைவாக இருக் கும் காளைகளுக்கும் கண்டிப் பாக உடல் தகுதிச்சான்று வழங் கப்படாது.

ஒவ்வொரு வட்டாரத்திலும் எத்தனை காளைகளுக்குத் தகுதிச் சான்று வழங்கப்பட்டது என்ற விவரங்களை கால்நடை உதவி இயக்குநர்கள், மாவட்ட இணை இயக்குநருக்கு வழங்குவார்கள். அவர் அந்தப் பட்டியலைச் சரி பார்த்து, ஜல்லிக்கட்டு நடக்கும் அன்று வாடிவாசலுக்கு அழைத்து வரும் காளைகளுக்கான தகுதிச் சான்றுகளையும், பட்டியலில் உள்ள காளைகளையும் ஆய்வு செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள நாட்டுக் காளைகளையே ஜல்லிக் கட்டுக்குக் கொண்டு வருவதால் அதற்கு நோய் பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு இல்லை. முதல் நாளே (02-ம் தேதி) நூற்றுக் கும் மேற்பட்ட காளைகள் வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்