காலத்துக்கு ஏற்ப உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நவீனப் படுத்தப்படாததால், விராலிமலை ஜல்லிக் கட்டுப்போட்டி சாதித்த உலக சாதனையை அலங்காநல்லூர் சாதிக்கவில்லை என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந் துள்ளனர்.
ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல் லூரைத்தான் பெருமையாக குறிப்பிடுவர். அந்தளவுக்கு அலங்காநல்லூர் வாடி வாசலில் காளைகளும், வீரர்களும் மல்லுக்கட்டுவது பார்வை யாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சிபாரிசால் குளறுபடி
கடந்த காலத்தில் வீரத்துக்கும், தகுதிக்கும் மட்டுமே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
தற்போது தகுதியில்லாத காளைகளையும் சிபாரிசில் வாடிவாசலில் அவிழ்க்கின்றனர். அந்த காளைகள் வாடிவாசலை விட்டு வெளியேறாமல் மிரண்டு மீண்டும் வாடி வாசலுக்குள் ஓடுவதால் நேரம் வீணாகிறது.
வாடிவாசலின் பின்புறம் காளைகளை வரிசைப்படுத்துவதும், பரிசோதனை செய்வதும் ஜல்லிக்கட்டு தொடங்கிய பிறகும் நடக்கிறது. அதனால், காளைகளை விரைவாக அவிழ்க்க முடியாததால், இந்த முறை 49 சதவீதம் காளைகளை அவிழ்க்க முடியாமல் உரிமையாளர் ஏமாற்றம் அடைந்தனர். அதில் 80 சதவீதம் வெளியூர்காரர்களின் காளைகள். அதனால், காளை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
காளைகளை பரிசோதனை செய்து டோக்கன் வழங்குவது முதல் வாடிவாசலில் அவிழ்த்து விடுவது வரை அலங்காநல்லூரில் சிபாரிசு தேவைப்படுகிறது. அதனால், அனைத்து பார்வையாளர்கள், காளை களுக்குமான ஜல்லிக்கட்டு தற்போது அலங்காநல்லூரில் நடப்பதில்லை.
ஆனால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்துக்குப் பிறகு பிரபலம் அடைந்த விராலிமலை ஜல்லிக்கட்டில் முன்பதிவு செய்த 1,553 காளைகளில் 1,353 காளைகளை அவிழ்த்துவிட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முன்பு மதுரை மற்றும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநா தபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மட்டுமே காளைகளும், பார்வையாளர்களும் அலங் காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருவர்.
ஆனால், தற்போது கிரிக்கெட்டுக்கு இணையாக ஜல்லிக்கட்டு பிரபலம் அடைந்துள்ளதால் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும், தனியார் டூரிஸ்ட் நிறுவனங்களின் ஏற்பாட்டால் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட்டனர்.
இதுதவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டைக் காண ஏராளமானோர் வருகின்றனர். அதனால், அலங்காநல்லூரில் லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரள்கின்றனர். ஆனால், அவர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை எளிதாகப் பார்ப்பதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
ஏமாற்றமடைந்த பார்வையாளர்கள்
கேலரிகளில் அமர முன்கூட்டியே பாஸ் பெற்றாலும் வெளியூர் பார்வையாளர்களால் கேலரிகளில் இடம் பிடிக்க முடியவில்லை.
அதனால், அவர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து சிறிதுநேரம் பார்த்துச் சென்றனர். அதனால், அடுத்தமுறை அலங்காநல்லூருக்கு வரவே வெளிநாட்டினர் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விராலிமலையில் சிறப்பான ஏற்பாடு
ஆனால், விராலிமலை ஜல்லிக்கட்டில் திரண்ட லட்சம் பேரும், போட்டியைக் காண அதி நவீனமாக கேலரிகளை அமைத்திருந்தனர். இதற்கு விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை திட்டமிட்டு நடத்திய அந்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர்தான் காரணம். அங்கு அதிகாலை 5 மணிக்கே காளைகள் பரிசோதனை முடிந்து வாடிவாசலுக்கு பின்புறம் வரிசைப்படுத்தப்பட்டன. காளைகள் விரைவாக அவிழ்த்து விடப்பட்டன.
வெறும் சாதனையை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், போட்டியைக் காண வந்த பார்வையாளர்களுக்கும் கேலரிகள் அமைத்து பார்வையிட வைத்தனர். ஆனால், அலங்காநல்லூரில் குறுகலான இடத்தில் ஆண்டாண்டு காலமாக போட்டி நடப்பதால் 10 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பார்க்க முடிகிறது.
காலத்துக்கேற்ப மாறுமா ?
அதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி குளறுபடிகளில் இருந்தாவது பாடம் கற்று விராலிமலை ஜல்லிக்கட்டைப் போல அனைத்து காளைகளையும் வாடிவாசலில் அவிழ்த்து விடவும், பார்வையாளர்கள் அனைவரையும் ஜல்லிக்கட்டை காண வைக்கவும் வசதிகள் செய்ய வேண்டும்.
அதற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலத்துக்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தனி மைதானமும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago