மேகதாது விவகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்ட வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்ட அதிமுக - திமுக எம்எல்ஏக்கள்

By செ.ஞானபிரகாஷ்

மேகேதாது விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது பகுதியில் கர்நாடக அரசு அணை காட்டுவது தொடர்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மனு அளித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை முற்றுகையிட்டு அவரது அலுவலகத்தின் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர்.

மேலும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா இதே விவகாரம் தொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கம் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்