கடந்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; குழந்தை திருமணத்தை தடுக்க புதிய கொள்கை: தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய சமூக நலத்துறை முடிவு

By மு.யுவராஜ்

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 6,149 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் குழந்தை திருமணங் களை தடுத்து நிறுத்த புதிய கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு பரிந்துரைகளை வழங்க சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 21 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைப்பது குழந்தை திருமணமாக கருதப்படுகிறது.

சைல்டு ஹெல்ப் லைன் 1098

தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098 எண்ணில் புகார் அளிக்கலாம். இதுதவிர, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இவற்றை எல்லாம் மீறி, குழந்தை திருமணம் நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தால் காவல்துறை உதவியுடன் திருமணத்தை நிறுத்தி சிறார்களை மீட்டு வருகின்றனர்.

இதன்படி, தமிழகம் முழு வதும் கடந்த 2013-ம் ஆண்டு 602, 2014-ம் ஆண்டு 989, 2015-ம் ஆண்டு 1,209, 2016-ம் ஆண்டு 1,326, 2017-ம் ஆண்டு 1,636, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 387 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 6,149 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

காரணங்களை கண்டறிய..

குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இதற்கான காரணங் களை கண்டறியும் பணியை தனியார் அமைப்பிடம் சமூக நலத்துறை ஒப்படைத்தது.

அந்த அமைப்பினர் கடந்த ஆண்டு குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட 1500 பேர் மற்றும் அவர்களது குடும்பங் களிடம் நேரடி ஆய்வு நடத் தினர்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஒருசில தினங்களில் சமூக நலத்துறையிடம் சமர்ப்பிக் கப்பட உள்ளது. இதன் அடிப் படையில், குழந்தை திரு மணத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை களை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பரிந்துரை யின் அடிப்படையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குழந்தை திருமணம் நடத்து வதால் திருமண உதவி தொகை உட்பட அரசு சார்பில் எந்த நலத்திட்டங்களும் கிடைக் காது என்று தெரிந்துதான் பெற் றோரே திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆய்வில் தெரிய வந்துள்ள தகவலின் அடிப்படை யில் குழந்தை திருமணங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். இவற்றின் அடிப்படையில், குழந்தைதிருமணங்களை தடுக்க தமிழக அரசு புதிய கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல் 5 இடங்கள்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தருமபுரியில் 587, சேலம் 434, தேனி 425, பெரம்பலூர் 411, விருதுநகரில் 361 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், முதல் 5 இடங்களை இந்த மாவட்டங்களே பிடித் துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்