ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தி (29). இவரது நண்பர் கவுதம். கவுதமுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் அம்மன் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து சுந்தரமூர்த்திக்கும் அதே தெருவில் வசித்து வரும் ஈஸ்வர மூர்த்திக்கும் பொதுச் சுவர் பிரச்சினை மற்றும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஈஸ்வர மூர்த்தியின் நண்பர்கள் தங்கபாண்டி மற்றும் சர்க்கரை ராஜ் ஆகியோரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago