ஜெயலலிதா வழக்கில் 27-ல் தீர்ப்பு: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

By எஸ்.சசிதரன்

சொத்துக் குவிப்பு வழங்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் என்று பிரார்த்தித்து தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், வரும் 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில், முதல்வருக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று வெல் லம் வைத்தும், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் நெய் தீபம் ஏற்றியும் அதிமுகவினர் வழிபாடு செய்துள்ளனர். புதுவை மாநில அதிமுக எம்எல்ஏக்கள், கருவடிக்குப்பம் கோமாதா கோயிலில் நேற்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தினர்.

மஹாளய அமாவாசையான இன்று ராகு ஸ்தலமான திருநாகேசு வரத்தில் ராகு பகவானுக்கு 108 குட பால் அபிஷேகம் செய்ய கும்பகோணத்தை சேர்ந்த அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், நவராத்திரி நாளை தொடங்குவதால் இந்த நாட்களில் நடத்தப்படும் பூஜைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கருதி, முக்கியமான கோயில்களில் சனிக்கிழமை வரை பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவொற்றியூர் வடிவுடையம்மன், சமயபுரம் மாரியம்மன், விராலி மலை முருகன், ரங்கம் ரங்கநாதர் ஆகிய கோயில்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடத்தவுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்