கவனம் ஈர்க்கும் கமல்... கவனிப்பாரா ரஜினி?

By மகராசன் மோகன்

தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம், விவசாயிகளுடன் கலந்துரையாடல், ‘இந்தியன் 2’ படத்தோடு நடிப்புக்கு முழுக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டி என அரசியலில் அடுத்தடுத்து அதிரடி விஷயங்களாக அரங்கேற்றி வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட்டு மக்களின் குறைகளைக் கேட்டது அரசியல் ரீதியாக அப்பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ரஜினியோ தற்போதைய மாநில அரசின் பதவிக்காலம் முடிந்த பிறகுதான், தனது முழு நேர அரசியல் பயணம் என தெளிவாக குறித்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்து பட நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல, ‘பேட்ட’ இசை வெளியீட்டிலும் அரசியல் சம்பந்தமாக ஒன்றும் பேசவில்லை.

எதுவுமே பேசாமல் இருப்பது; ஒருவேளை பேசினால் புதிராகவோ, சூசகமாகவோ மட்டுமே பேசுவது என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் ஓட்டப்போகிறார் என்பது புரியவில்லை.

இது ஒரு பக்கம் என்றால், ரஜினி மக்கள் மன்றத்திலும் ஆங்காங்கே பிரச்சினைகள் காணப்படுகின்றன. சமீப உதாரணம் தமிழகத்தின் மையப்புள்ளியான திருச்சி.

திருச்சியில் தற்போதைய மாவட்டச் செயலாளர் எம்.கலீல் அணி, மறைந்த நிர்வாகி சாகுல் ஹமீதுக்கு பிறகு பாலன் அணி, கர்ணன் அணி என ரஜினி மக்கள் மன்றத்தில் 3 கோஷ்டிகள் செயல்படுகின்றன. இத்தகவல் பலமுறை ரஜினியின் காதுக்கு சென்ற பிறகும்கூட பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

இந்த சூழலில், நாளை ரஜினி பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டுவதில் மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது.

சமீபத்தில் நடந்த திருச்சி மாநகர, நகர, ஒன்றிய கூட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர் எம்.கலீல் அணியினர், ‘தங்கள் அணி போஸ்டர்களை பெரிதாக போட வேண்டும்; மற்ற அணியினரின் போஸ் டர்களில் தங்களது அணியினரின் புகைப்படம் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் உத்தரவிட்டுள்ளதாக மற்ற அணியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சலசலப்பில் தொடங்கிய நிர்வாக கூட்டம் கைகலப்பு வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி மக்கள் மன்றத்தின் திருச்சி மாவட்ட அளவிலான நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறும்போது, ‘‘கடலூரை இரண்டாக பிரித்து ரஜினி மக்கள் மன்றம் 2 மாவட்ட நிர்வாகமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அதுபோல, திருச்சியையும் இரண்டாக பிரித்தால்தான் கோஷ்டி பூசல் தீரும்’’ என்றார். இதுபோல ஆங்காங்கே நிலவும் சிறுசிறு பிரச்சினை கள், கோஷ்டி மோதல்களைச் சரிசெய்து விட்டு, கமல் போல எப்போது அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கப்போகிறார் ரஜினி?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்