பெரம்பலூர் மகிளா கோர்ட் அரசு வழக்கறிஞர் சித்ராதேவி போக்சோ சட்டத்தில் கைதாகியவருக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சாட்சி சொல்ல வற்புறுத்தி செல்போனில் பேசியது பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இதனால் அவர் அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்ர்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மேட்டூரைச் சேர்ந்த சரண்யா என்பவரை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் வீட்டிற்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. சரண்யா மைனர் என்பதால் அவரின் பெற்றோர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சித்ராதேவி ஆஜரானார். வழக்கு விசாரணையில் இருக்கும் போதே குற்றம் சாட்டப்பட்ட சிவபாலனுக்கு ஆதரவாக புகார் அளித்த சரண்யா மற்றும் அவரது அம்மாவுடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியானது.
அதில் சரண்யாவிடம் பேசிய அரசு வழக்கறிஞர் சித்ராதேவி, சிவபாலனுக்கு ஆதரவாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷாமித்தல் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். விசாரணையில் அரசு வழக்கறிஞர் பிரதிவாதிக்கு ஆதரவாகவும்,அவரைக் காப்பாற்றும்படியும் பேசியது உறுதியானது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தா பரிந்துரையின் படி சித்ராதேவி அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அப்பொறுப்பில் வழக்கறிஞர் வினோத் நியமியப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியினரின் பரிந்துரைப்படி நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago