செங்கல்பட்டை அடுத்த ஆத்தூரில் அரசு மீன்குஞ்சு வளர்ப்புப் பண்ணை ரூ.1 கோடியில் விரி வாக்கம் செய்யப்பட்டு, 20 லட்சம் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூரில் 8 ஏக்கர் பரப்பில் உள்ள அரசு மீன் பண்ணையில், மேட்டூர், பவானி சாகர் பகுதியில் உள்ள அரசு மீன் பண்ணையில் இருந்து மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு, ஆண்டுக்கு 12 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இதேபோல் ஏரிகளில் கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மீன் ரக குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஏறக் குறைய, 1.5 லட்சம் மீன்குஞ்சுகள் காஞ்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணை யாளர்களுக்கு வழங்கப்படுகின் றன. மேலும் விவசாயிகள் பல் நோக்கு பண்ணைக் குட்டைகள் அமைத்து அதில் மீன்களை வளர்க்க ஊக்குவிப்பதோடு, அரசு சார்பில் 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு, கொளவாய் ஏரி மிதவைக் கூண்டுகளில் 8 லட்சம் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் மீன்களை மீன் கூட்டுறவு சங்கத்தில் உறுப் பினர்களாக உள்ளவர்கள் குத்தகை அடிப்படையில் பிடித்து விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப் படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆத்தூர் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை, ரூ.1 கோடி செலவில், 1,000 ச.மீ பரப் பில் விரிவாக்கம் செய்வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 8 லட்சம் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன் வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற் போது பொதுமக்கள் தேவைக்கா கவும், பண்ணை குட்டை விவசாயி களுக்காகவும் ரூ. 1 கோடியில் பண்ணை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மீன் குஞ்சு வளர்க்க, 5 தொட்டிகள் புதிதாக கட்டப்பட உள்ளன. இதற்காக கட்டு மானப் பிரிவைச் சேர்ந்த பொறி யாளர்கள் ஆய்வுப் பணியை முடித்துள்ளனர். விரைவில் பணி கள் தொடங்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago