திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

By என்.மகேஷ் குமார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நிறைவு நாளான நேற்று காலை, பத்ம குளத்தில் நடைபெற்ற பஞ்சமி தீர்த்த தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

திருப்பதி அடுத்துள்ள திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் நிறைவு நாளான நேற்று காலை, கோயில் அருகே உள்ள பத்ம குளத்தில், பஞ்சமி தீர்த்த புனித நீராடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். முன்னதாக, உற்சவ மூர்த்தியான பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வாருக்கு, கோயில் குளத்தின் அருகே சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.

இதனைத் தொடர்ந்து காலை 11.41 மணிக்கு பஞ்சமி தீர்த்த புனித நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பத்ம குளத்தில் மூழ்கி புனித நீராடினர். இதில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு 2,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு இலவச உணவு, குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பத்மாவதி தாயார் கோயிலில் புஷ்பயாகம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்