பல்கலைக்கழக ஆசிரியர்கள் சென்னையில் மறியல்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரி யர் கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக் கும் அதிகமான ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தின் போது ஆசிரியர்கள் தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண் ஆசிரியர்கள் உட்பட 65 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்ற னர். தமிழகத்தில் 2006-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணிக்கு வந்த 50 சதவீதம் ஆசிரியர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வும் பணி உயர்வும் வழங்கப்படவில்லை. திருச்சியில் இயங்கி வரும் நேஷ னல் கல்லூரி, தஞ்சை டி.யு.கே கல்லூரி, ஈரோடு சிக்கையா நாயக் கர் கல்லூரி, கோவை சிபிஎம் கல் லூரி, கோவை கொங்குநாடு கல் லூரி ஆகியவை அங்கு பணிபுரி யும் ஆசிரியர்களுக்கு எதிரான போக் கினை கடைபிடித்து வருகின்றன.

இது சம்பந்தமாக பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே கல்லூரிகளில் பணிபுரி கிற ஆசிரியர்களின் பணிப்பாது காப்பையும், நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்த மறியல் போராட்டத்தை நடத்தி னோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE