தமிழகத்தில் தென்மேற்குப் பருவக் காற்று மே மாதம் தொடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தி நாளொன்றுக்கு 2,500 மெகா வாட்டாக உள்ளது. அனல், புனல், காற்றாலை மூலம் மொத்தம் 10,250 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தி செய்ய முடியும்.
காற்றாலைகள் மூலம் நாளொன் றுக்கு 3,400 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மரபுசாரா எரிசக்தித் துறை மற்றும் தமிழக மின்வாரியத்தின் கட்டுப்பாடுகளால் சுமார் 20 சதவீத காற்றாலைகள் இயங்காமல் உள்ளன. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி , நெல்லை ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அனுமதி வழங்குதல், பராமரிப்பு பணிகளுக்காக உடுமலையை தலை மையிடமாகக் கொண்டு செயற்பொறி யாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் மே முதல் அக்டோபர் வரை 6 மாதங்களுக்கு மட்டுமே காற்றாலை கள் இயங்கும். இந்த காலகட்டத்தில் மட்டுமே பருவக் காற்று வீசுகிறது. 850 கிலோவாட் அல்லது .5 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் ஒரு காற்றாலையை நிறுவ ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடி வரை தேவைப்படும். 1.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைக்கு ரூ.12 கோடி வரை செலவாகும். இவை ஜெர்மனியில் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி
தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட காற்றாலை பண்ணையாளர்கள் உள்ளனர். ஒரு காற்றாலையை நிறுவ மரபுசாரா எரிசக்தி ஆதார அமைப்பில் அனுமதி பெற வேண்டும். பின்னர் உற்பத்தி யாகும் மின்சாரத்தை மின்வாரியத் திடம் வழங்க வேண்டும். ஒரு யூனிட் மின்சாரம் தற்போது ரூ.3.39 பைசாவுக்கு கொள்முதல் செய்யப் படுகிறது. இந்நிலையில், சில ஆண்டு களாக அரசு கடைபிடித்து வரும் விதிமுறைகளால் ஓரிரு காற்றாலை களை இயக்கிவரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடும் நெருக் கடியில் சிக்கியுள்ளனர்.
முடங்கியுள்ள காற்றாலைகள்
உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியாளர் குமார் சிதம் பரம் கூறியதாவது: ஓர் ஆண்டில் 6 மாதங்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி நடை பெறுகிறது. ஆனால், பராமரிப்பு, ஆபரேட்டிங் உள்ளிட்ட காரணங்களைக் கூறி ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இடி, மின்னல் தாக்குதல், சாப்ட்வேர் பிரச்சினை, ஆயில் கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராள மான காற்றாலைகள் மின் உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கியுள்ளன. காற்றாலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் அரசுக்கு செலுத்த வேண் டிய தொகையை செலுத்தியாக வேண்டும்.
இதுபோன்ற நெருக்கடிகள் இருப்பதால் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாமலும், மின் உற்பத்தி யில் ஈடுபட முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம். பல மாவட்டங்களிலும் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளவர்கள் என்னைப் போன்று 1,400 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் இதுபோன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதற்கு அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கா மல் உள்ளன. இவை மீண்டும் இயங்கினால் தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம், மரபு சரா எரிசக்தி துறை மற்றும் காற்றாலை பண்ணைத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கோவை, நெல்லை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 காற்றாலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலைகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே உற்பத்தியாளர்கள் செயல்பட வேண்டியுள்ளது.
அரசுக்கு காற்றாலைகளின் உற்பத் திக்கு தகுந்தாற்போல் கட்டணம் செலுத்தவேண்டும். சில இடங்களில் பராமரிப்பு பிரச்சினை களால் காற்றாலை பண்ணைகள் இயங்கவில்லை. அதனால் 3,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்திய செய்ய வாய்ப்பு இருந்தும் 2,500 மெகாவாட் மின்சாரமே மட்டுமே பெறவேண்டிய சூழல் உள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago