பொதுமக்களின் சேமிப்புக்கு வலை விரிக்கும் மோசடி நிதி நிறுவனங்கள்

By த.சத்தியசீலன்

பொதுமக்களின் சேமிப்புக்கு வலை விரிக்கும் மோசடி நிறுவனங்க ளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பணப் புழக்கம் அதிகமுள்ள மாவட்டம் கோவை. தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அதிகளவில் அமைந்துள்ளன.

கோவை மக்களின் பொருளா தாரத்தை குறி வைக்கும் மோசடி கும்பல்கள், ஈமு கோழி, நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம், மாதத் தவணையில் குறைந்த விலையில் வீட்டுமனை விற்பனைத் திட்டம், மல்டி லெவல் மார்க்கெட்டிங், கடன் தேவைப்படுவோருக்கு உடனடி பண வசதி என பல்வேறு மோசடி திட்டங்கள் குறித்து விளம்பரப் படுத்தி, தங்களுடைய ஏமாற்று வலைக்குள் பொதுமக்களை வீழ்த்துகின்றனர்.

சில ஆயிரங்கள் முதல் கோடிக் கணக்கில் முதலீடு செய்து ஏமாந்த வர்கள், கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் தஞ்சமடைகின்ற னர். அவர்களும் வழக்கு பதிவு செய்து, பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்கின்றனர். இதன்படி 18 ஆண்டுகளில் சுமார் 34 ஆயிரம் பேரின் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளது, கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு.

ஏமாற்றுக் கும்பலின் மோசடி வலைக்குள் சிக்காமல் பொதுமக் கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.ராஜேந்திரன் கூறியதாவது:

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறு வனங்களின் பெயர், முகவரி ஆகிய வற்றை http://rbi.org.in/commonman/english/Scripts/NBFC's.aspx என்ற இணையதளத்தில் முதலில் சரிபார்க்க வேண்டும். இவ்வாறு பதிவு பெற்ற நிதி நிறுவனங்கள், அதிகபட்சமாக ஐந்தாண்டு முதிர்வு காலத்துக்கு மட்டுமே பொதுமக்களிடம் டெபாசிட் பெற முடியும். அதற்கு அதிக பட்சமாக 12.5 சதவீதம் மட்டுமே வட்டியாக கொடுக்க முடியும். ஆகவே, அதிக வட்டி கொடுக்கப் படும் என்ற வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்.

நிதி நிறுவனங்கள், அவற்றை எந்த மாதிரியான திட்டத்தில் முதலீடு செய்து, வருமானத்தைப் பெருக்கி திருப்பித் தருவார்கள் என்பதையும், உண்மையில் அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பதையும் முதலீட்டாளர்களான பொதுமக்கள் ஆராய வேண்டும். தங்களுடைய முதலீட்டுத் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளனவா? என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும். பரிசுச் சீட்டு மற்றும் பண சுழற்சி திட்ட தடை சட்டம் 1978-ன் கீழ், பண சுழற்சி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்ய வேண்டாம். பொதுமக்களிடம் டெபாசிட் பெறுவதற்கு பரிசுப் பொருட்கள், ஊக்கத்தொகை முதலியவற்றை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுப்பவை போலி நிறுவனங்களாகும்.

அதிகாரபூர்வமற்ற நிதி நிறு வனங்கள், பண சுழற்சி திட்டங்கள் நடத்துவோர் குறித்து தகவல் தெரிந்தால், 0422-2303669 என்ற பொருளாதாரக் குற்றப் பிரிவு எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ஜெயா, ஆல்பர்ட், உதவி ஆய்வாளர்கள் சத்தியராஜ், உஷா தலைமையி லான போலீஸார், நிதி நிறுவனங் களின் மோசடியில் இருந்து பொது மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறைத்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்