நகர்புறங்களில் காற்று மாசு அதி கரித்து வரும் நிலையில், தங்கள் பகுதியில் காற்றின் தரத்தை அறிந்து வெளியில் செல்வது தொடர்பாக திட்டமிடுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. முன்பு தொழிற்சாலைகளால் மட்டுமே காற்று மாசு ஏற்பட்டு வந்தது. தற்போது அதிகரித்து வரும் வாகனங்களின் பெருக்கம், பராமரிப்பில்லாத, காலாவதியான வாகனங்களை இயக்குவதால் வெளியேறும் அடர்ந்த புகை, நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை யில் மண் இல்லாதவாறு பராம ரிக்கத் தவறுவது போன்ற பல்வேறு காரணங்களால் நகர்ப்புறங்களில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதைத் தடுக்க அரசுத் துறைகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிகரித்து வரும் காற்று மாசுவால் பெரிய உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின் றன. அதனால் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை https://app.cpcbccr.com/AQI_India என்ற மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளம் மூலம் அறிந்து, அதற்கேற்றவாறு வெளியில் செல்லும் நடவடிக்கையை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்” என்று நேற்று பதிவிட்டுள்ளது.
சென்னையில் மோசம்
மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தபடி, நேற்று காலை 7 மணியளவில், சென்னையில் காற் றின் தரம் எவ்வாறு உள்ளது என்று பார்வையிட்டபோது, காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்தது. மணலியில் 2.5 மைக்ரோ மீட்டர் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் மிக நுண்ணிய துகள்கள், ஒரு கனமீட்டர் காற்றில் அதிகபட்சமாக 334 மைக்ரோகிராமாக இருந்தது. ஆலந்தூரில் 305 மைக்ரோகிராமாக இருந்தது. இந்த நுண்ணிய துகள்கள், ஒரு கனமீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் அளவு இருப் பதுதான் அனுமதிக்கப்பட்ட அளவா கும். இப்பகுதிகளில் சுமார் 5 மடங்கு காற்று மாசு அதிகமாக உள்ளது.
நுறையீரல் துறை மருத்துவர் கள் கூறும்போது, “காற்று மாசு அதிகரிப்பதால், மாசு துகள்கள் நுரையீரலில் நிறைந்து, ஆக்சி ஜனை பிரித்தெடுக்கும் திறன் குறை கிறது. அதனால் உடலுக்கு ஆக்சி ஜன் பரவுவதும் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும். ஒவ் வாமையால் சளி பிடிக்கும். மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுறையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக் குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படும். ஏற்கெனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும்” என்றனர்.
மணலியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கூறும்போது, “மாசுக்கட் டுப்பாட்டு வாரியம் பல இடங்களில் காற்று தர கண்காணிப்பு கருவி களை நிறுவி கண்காணித்து வருவதாக கூறுகின்றனர். அப்படி மாசு இருப்பது தெரியவந்தபின், எடுத்த நடவடிக்கை குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. அத்துறை காற்று மாசுவை தடுப்பதே இல்லை” என்றார்.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, “மணலி, ஆலந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து தடுக்கப்படும்” என்ற னர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago