ஆசிரமத்தை மாற்றும் நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு: திருவண்ணாமலையில் திரளும் அமைப்புகள்

பெங்களூர் பிடதி ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு பெங்களூரில் திங்கள்கிழமை ஆண்மை பரிசோதனை நடத்தப் பட்டது. இதனைத் தொடர்ந்து பிடதி ஆசிரமத்தில் சீடர்களிடம் பேசிய நித்யானந்தா, பெங்களூர் போலீஸார் மற்றும் மருத்துவர்கள் தன்னை அவமதித்துவிட்டனர். ஆகவே, பிடதி ஆசிரமத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல இருக்கிறேன்’’ என தெரிவித்தார். இதற்கு திருவண் ணாமலையில் பல்வேறு அமைப்பு களும் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமுஎச மாநிலத் துணை செயலாளர் கருணா கூறும் போது, ‘‘நித்யானந்தாவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திருவண்ணா மலையில் நித்யானந்தாவை பீடம் அமைக்க விடமாட்டோம்.’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் கூறும்போது, ‘‘இதுகுறித்து தலைமையிடம் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து நடவடிக்கை எடுப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னருடன் ஆலோசனை நடத்தி கூட்டு இயக்கமாக போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

தமிழ் தேசிய மக்கள் கட்சி நிறுவனர் சிவபாபு கூறும் போது, ‘‘நித்யானந்தா திருவண் ணாமலைக்கு வருவதை எதிர்க்கவில்லை ஆனால், கிரிவலப் பாதையில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவதை ஏற்க முடியாது. பழைய இடத்தில் ஆசிரமம் தொடங்கினால் அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும். ஆசிரமம் அமைக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. கிரி வலப் பாதைக்கு வெளியே வேறு எந்த இடத்திலும் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க எங்களுக்கு எந்த தடையும் இல்லை’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE