கோல்டுபிரேம், 3டி, பாக்ஸ் வடிவங்களில் புதிய அறிமுகம்: காலண்டர், டைரிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது 

By டி.செல்வகுமார்

சென்னையில் புத்தாண்டு காலண் டர் மற்றும் டைரி விற்பனை சூடு பிடித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய வரவான “கோல்டுபிரேம்” காலண்டருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 3டி காலண்டர் குழந்தைகள், இளைஞர்களைக் கவர்கிறது.

முன்பெல்லாம் புத்தாண்டை யொட்டி காலண்டர் மற்றும் டைரி கள் விற்பனை ஓரிரு மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்துவிடும். இப் போது ஸ்மார்ட்போன் வருகையால் காலண்டர், டைரி விற்பனை குறைந்துவிட்டது. கடந்த மாதம் வரை மந்தமாக இருந்த விற்பனை, டிசம்பர் மாதம் பிறந்ததில் இருந்து விறுவிறுப்படைந்துள்ளது. சென்னை பாரிமுனை பந்தர் தெரு வில் உள்ள 15 மொத்த விலைக் கடைகள் மற்றும் டிபார்ட்மெண்டர் ஸ்டோர், பேன்ஸி ஸ்டோர் உள் ளிட்ட இடங்களிலும் காலண்டர், டைரி விற்பனை சூடுபிடித்துள்ளது.

சிவகாசி, கொல்கத்தா, டெல்லி யில் இருந்து சென்னைக்கு காலண் டர், டைரிகள் வந்துள்ளன. சீனா வில் இருந்தும் காலண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. போட்டோ பிரேம் போல “கோல்டு பிரேம்” காலண்டர் இந்தாண்டு புதுவரவு. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கடவுள்களின் படங் கள், இயற்கை காட்சிகள், குழந் தைகள் படங்களுடன்கூடிய காலண் டர்கள் அதிக எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன. அனைத்து மத கடவுள்களின் படம் இடம்பெற்ற 3டி காலண்டர்கள் விற்கப்படு கின்றன. அதேநேரம் தொழில் நிறுவன முகவரியுடன் காலண்டர், டைரிகள் வாங்கும் ஆர்வமும் சற்று குறைந்துள்ளது.

இதுகுறித்து காலண்டர், டைரி மொத்த விற்பனையாளர் பாலாஜி கூறியதாவது: பல்வேறு நிறுவனங் கள் வாங்கும் டைரி எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்து விட்டதால் காலண்டர், டைரி விற்பனை 40 சதவீதம் குறைந்துள் ளது. இருப்பினும், காகித விலை உயர்வு காரணமாக காலண்டர், டைரி விலை 5 சதவீதம் அதிகரித் துள்ளது.

சிறியதும் பெரியதுமான பல வண்ண காலண்டர் ரூ.25 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. தினசரி காலண்டர், மாத காலண் டர், டேபிள் காலண்டர் ஆகியன பல வண்ணங்களில் கிடைக்கிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள “கோல்டு பிரேம்” காலண்டர் விலை ரூ.250. 3டி காலண்டர் விலை ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

இது குழந்தைகள், இளைஞர் களை கவர்ந்துள்ளது. வெவ்வேறு அளவுகளில், அதிகபட்சம் ஏ4 அளவு உள்ள டைரிகள் வரை விற்கப்படுகின்றன. பாக்ஸ் வடி விலான டைரி இந்தாண்டு புதிய வரவாகும். ரூ.25 முதல் ரூ.600 வரை டைரிகள் விற்கப்படுகின்றன. 12 குட்டி டைரிகளுடன்கூடிய “இயர் பிளானர்” விலை ரூ.75 ஆக உள் ளது. இவ்வாறு பாலாஜி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்