தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக் கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அறிவித்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசின் உத்தரவின்பேரில் மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டது.
இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை தீர்ப்பாயம் அமைத்தது. இக்குழுவினர் தமது அறிக்கை யில், `ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது’ என கூறியிருந்தனர்.
தமிழக அரசு பதில்
கடந்த 7-ம் தேதி நடைபெற்ற விசா ரணையில், `தமிழக அரசின் அர சாணை குறித்து முடிவு செய்யும் அதிகாரம் குழுவுக்கு கிடையாது. குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இவ்வழக் கின் இறுதி விசாரணை அன்றைய தினமே (டிச.7) தொடங்கியது. `ஆலையைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி முதலீடு செய்ய தயாராக இருப்பதாக’ ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார்.
தமிழக அரசு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியலிங்கத்தின் வாதம் பாதி முடித்திருந்த நிலையில் வழக்கு 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது.
2-ம் நாள் விசாரணை
தேசிய பசுமை தீர்ப்பாயத் தலை வர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர் லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு களை எடுத்துக் கூறி, இந்த ஆலையை இயங்க அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார்.
வைகோவுக்கு அனுமதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தான் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அவ ருக்கு 25 நிமிடங்கள் அனு மதி தரப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தனது வாதத்தை வைகோ முன் வைத்தார்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தரப்பு வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம், ஸ்டெர் லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு தரப்பு வழக்கறிஞர் ரித்விக் தத்தா ஆகியோர் வாதாடினர். பின்னர், `இவ்வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்’ என நீதிபதி ஏ.கே.கோயல் அறிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
ஸ்டெர்லைட் வழக்கில் இறுதி விசாரணை கடந்த 7-ம் தேதி தொடங் கியதில் இருந்தே தூத்துக்குடியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாநகரிலும், ஸ்டெர் லைட் ஆலையிலும் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago