ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் இன்று அமெரிக்கா பயணம்

By மகராசன் மோகன்

ரஜினிகாந்த்  குடும்பத்தினருடன் 3 வார பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். 

கடந்த ஏப்ரல் மாதம்  அமெ ரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த்,  அங்கு 2 வாரங்கள்  தங்கினார். அதன் பிறகு ரஜினி மக்கள் மன்றம், அரசியல் கட்சி அறிவிப்பு, ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது,  ‘காலா’,  ‘2.0’ ரிலீஸ் உள்ளிட்ட பணிகளிலும் ‘பேட்ட’ படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தினார்.

நடிப்பு, மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு என தொடர்ச்சியான பணிகளுக்கு இடையே சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.

ஜனவரி 10-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கி, புத்தாண்டு விடுமுறையை அங்கு கொண்டாடு கின்றனர். பிறகு, சென்னை திரும்பியதும், பொங்கல் வெளியீடாக வரவுள்ள ‘பேட்ட’  திரைப்பட கொண்டாட்டம்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளார்.

ரஜினி டிவி?

ரஜினி தனக்கு ஆதரவாக தொலைக்காட்சி சேனல் ஒன்று இருக்க வேண்டும் என விரும்புவதாகவும்,  அதற்கு ‘சூப்பர் ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’, ‘தலைவர் டிவி’ என்ற பெயர்களை பதிவுக்காக அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் விசாரித்தபோது, ‘சேனல் தொடங்குவது குறித்து ரஜினி இன்னும் எந்த முடிவும் கூறவில்லை. அதனால் அதுபற்றி உறுதியாகக் கூற முடியாது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்