ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 2005-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இதில் கிராமங்களில் உள்ள வர்களுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க் கால்களைத் தூர்வாருதல், உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 12,524 ஊராட்சிக ளில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியாளர்களின் வருகைப் பதிவேடு, பணப் பட்டு வாடா செய்யும் வங்கி புத்தகக் கணக்குகளை, பணி தளப்பொறுப் பாளர்களுடன் ஊராட்சி செயலர் களும் கூடுதலாகப் பொறுப்பேற்று கவனித்து வருகின்றனர்.
இதற்காக பணி தளப் பொறுப் பாளருக்கு முழுக் கூலியாக தினசரி ரூ.224-ம், ஊராட்சி செயலருக்கு சிறப்பு ஊதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இனி, இந்தப் பணியைக் கவனிக்க ஊராட்சி செயலர்களுக்குப் பதிலாக ஒருங் கிணைப்பாளர்கள் என்ற பெயரில் புதிய பதவியை உருவாக்கி, அதில் பெண்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி இந்த ஒருங்கிணைப் பாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் களுக்கு மாத ஊதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு திட்ட ஒன்றியம் வாரியாக பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 12,524 ஊராட்சிகளில் ஊராட்சிக்கு ஒருவர் என 12,524 மகளிருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தா சீனிவாசன் கூறிய தாவது: காஞ்சி மாவட்டத்தில் 633 ஊராட்சிகளில் ஒருங்கிணைப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மகளிர் திட்டத்தில் உள்ள திறமை வாய்ந்த நபர்கள் முன் னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஒருங்கிணைப்பாளர்கள், வேலை அட்டை கோரி வரும் விண்ணப்பங்கள், கிராம சபைக் கூட்டம், சமூக தணிக்கை, வேலை ஒதுக்கீடு, சம்பளம் வழங்குதல், உருவாக்கப்பட்ட நிலையான சொத்துகள், பெறப்பட்ட புகார் கள், பொருட்கள் என 9 வகையான பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். இவர்கள் இம்மாதம் முதல் தேதியில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago