எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக் கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந் திர மோடி ஜன.27-ல் மதுரை வருகி றார். அன்றைய தினம் மதுரையில் நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக 218 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்ட மத்திய அமைச்சரவை ரூ.1,264 கோடி ஒதுக் கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் மேற்கொள் வதற்கான ஒப்பந்ததாரரை முடிவு செய்தல், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள் ளும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜக மாநில நிர் வாகி ஒருவர் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா ஜன.27-ம் தேதி நடை பெற உள்ளது. அன்றைய தினம் பாஜக மக்களவைத் தேர்தல் பிரச் சாரக் கூட்டம் மதுரையில் நடக்கி றது. இதில் பிரதமர் கலந்து கொள் வார்.
மேலும் பாஜக இளைஞர் அணி யின் கூட்டம் கோவை அல்லது சென்னையில் அதே நாளில் நடக்க வுள்ளது. இதிலும் மோடி பங்கேற் பார் என்றார்.
இதற்கிடையே அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் பிரத மரை வரவேற்று மதுரையில் பல் வேறு இடங்களில் சுவர் விளம்பரங் கள் எழுதப்பட்டு வருகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்க ளில் இந்த விளம்பரங்கள் வரையப் படும் என பாஜகவினர் கூறினர்.
மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா வில் பிரதமருடன் மத்திய அமைச்சர் கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் உட் பட பலர் பங்கேற்கின்றனர். தமிழகத் துக்கு எய்ம்ஸ் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு விழாவில் முக்கி யத்துவம் அளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மருத்துவமனை அமைய உள்ள 218 ஏக்கரும் திறந்த வெளியாகவே உள்ளதால், அங்கேயே விழாவை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால், மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் விழா நடக்கும் இடத்துக்கு பிரதமர் வரவும், இதற் காக ஹெலிகாப்டர் தளத்தை தோப் பூர் காசநோய் மருத்துமவனை வளாகத்தில் அமைக்கவும் திட்டமி டப்பட்டுள்ளது. மேலும் மதுரை- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய உள்ள இடம்வரை யில் புதிய சாலை அமைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.
கட்டுமான பணி தொடங்கிய 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்பட தொடங்கும். தினசரி தலா 1,500 வெளி, உள் நோயாளிகள் கையாளப்படுவர் என்றும், பல உயர் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவுகள் செயல்படும் என்றும், செவிலியர் கல்லூரி தனியாக நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையால் 16 தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோடி பேர் பயனடைய உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago