கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சுமார் 60 லட்சம் தென்னை மரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் கோரதாண்டவத் தால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உட்பட 12 மாவட் டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந் தன. அவற்றை கணக்கிடும் பணியில் 1,020 உதவி வேளாண்மை அலுவலர் களும், அதே எண்ணிக்கையில் கிராம நிர்வாக அலுவலர்களும் ஈடுபட்டனர்.
இதில், புயலால் சுமார் 60 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ம் தேதி யில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், உதவி வேளாண்மை அலுவலர்கள் மட்டுமே சேதமடைந்த தென்னை மரங்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கணக் கெடுப்புப் பணியை மேற்கொண்டா லும் கிராம நிர்வாக அலுவலர்கள் அதனை சரிபார்த்த பின்னரே, கணக் கெடுப்பு இறுதியாகும். கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தத்தால் இந்த கணக்கெடுப்புப் பணி முழுமை பெறவில்லை.
இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘புயல் பாதி்த்த மாவட்டங்களில் தென்னை மரம் மறுநடவுக்கான ஆயத் தப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தியாவில், கேரளாவில்தான் தென்னை மரங்கள் அதிக பரப்பள வில் பயிரிடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில்தான் தென்னை மரங் களின் உற்பத்தித்திறன் அதிகம். இரண் டரை ஏக்கரில் (ஒரு எக்டேர்) ஓராண் டுக்கு 175 தென்னை மரங்களில் இருந்து 11,481 தேங்காய்கள் கிடைக்கும். இது தேசிய சராசரியாகும். ஆனால், தமிழ்நாட்டில் 14,251 தேங்காய்கள் கிடைக்கின்றன.கிராமப் பொருளா தாரத்தில் முக்கியப் பங்காற்றிய தென்னை மரங்கள் புயலால் வேரோடு சாய்ந்துவிட்டன.
இதுவரை சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந் திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் 10 லட்சம் மரங்கள் சேதமடைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தென்னங்கன்றுகள் வாங்கு வோம். தென்னங்கன்று பலனளிக்க 5 ஆண்டுகள் ஆகும். அதுவரை ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு, சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதனை 100 சதவீத மானியத்தில் வழங்குவது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
தென்னங்கன்றை ஓராண்டு பரா மரிக்கத் தேவையான பணம் வழங்கப் படும். சேதமடைந்த தென்னை மரங் களைக் கணக்கெடுக்கும் பணி முடிவடைந்த கிராமங்களில் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும் பணி தொடங்கிவிட்டது” என்றார்.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கணக் கெடுப்புப் பணியை விரைவில் முழுமையாக முடித்து அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் நிவா ரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago