சென்னை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்இருப்பு குறைவாக இருப்பதாலும், போதிய அளவு பருவமழை பெய்யாததாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங் கும் பூண்டி, புழல், செம்பரம்பாக் கம், சோழவரம் ஆகிய 4 ஏரி களில் நீர் இருப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இந்த ஏரி களின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி 1,683 மில்லியன் கனஅடி மட்டுமே நீர்இருப்பு இருந் தது. கடந்த ஆண்டு இதே நாளில் 5,246 மில்லியன் கனஅடி இருந்தது.அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகியவை வடகிழக்கு பருவகால மாகும். அக்டோபர், நவம்பரில் வழக்கத்தைவிட 52 சதவீதம் மழை குறைவாகப் பொழிந்துள்ளது. டிசம்பர் தொடங்கி 10 நாட்களாகியும் இதுவரை மழை இல்லை.
இந்நிலையில், போதிய மழை இல்லாமல் ஏரிகளில் நீர்இருப்பு கணிசமாகக் குறைந்துவிட்டால் சென்னை, புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். அதனால் தட்டுப்பாடு வருவதற்கு முன்பு உரிய முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.
“ஏரிகளில் நீர்இருப்பு குறைவு காரணமாக சென்னையில் ஓராண் டுக்கு முன்பே தினசரி குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது 650 மில்லியன் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.
தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி சென்னைக்கு குடிநீர் தேவைக்காக குறிப்பிட்ட அளவு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படவில்லை. இது போன்ற காரணங்களால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால், நீர் ஆதாரங் களில் போதிய அளவு நீர்இருப்பு இருப்பதால், குடிநீர் தட்டுப்பாடு வராது என்கிறது சென்னை குடிநீர் வாரியம்.
இதுகுறித்து வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
4 ஏரிகளில் உள்ள தண்ணீர், பிப்ரவரி வரை குடிநீர் தேவை யைப் பூர்த்திசெய்யும். திருவள் ளூர் மாவட்டத்தில் உள்ள 10 விவசாயக் கிணறுகளில் தினசரி 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். சிக்கராயபுரம் உள் ளிட்ட 22 கல்குவாரிகளில் 1,500 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. இதுதவிர, போரூர் ஏரியிலும் தண்ணீர் உள்ளது.
தற்போது வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங் களில் இருந்து 200 மில்லியன் லிட்டர், 4 ஏரிகளில் இருந்து 270 மில்லியன் லிட்டர் என மொத்தம் 650 மில்லியன் லிட்டர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் விநியோகிக்கப்படுகிறது. வரும் காலங்களிலும் இதே அளவு தண்ணீர் வழங்கப்படும் என்றார்.
இதற்கிடையே, தன்னார்வ அடிப் படையில் வானிலையை கணித்து கூறிவரும் செல்வகுமார், “சென்னை உள்ளிட்ட வட மாவட் டங்களில் இந்த மாதத்தில் 2 முறை அதிக அளவு மழை பெய் யும். அதனால் ஏரிகள் நிரம்பி வழியும்’’ என்று நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago