ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 600 கிராம் தங்கக் கட்டிகளை, கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு ஏர் அரேபியா விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவரின் நடையில் மாற்றம் இருந்ததைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் இருந்த தனியார் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், 600 கிராம் எடையுள்ள 6 தங்க பிஸ்கட்டுகளை ஆசனவாய் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மான் அமீது (39) என சுங்கத்துறையினர் தெரிவித் தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago