போலீஸ்காரர்களால் பாலியல் தொந்தரவு: கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்

கணவனை கைது செய்வதாக மிரட்டி ஒரு பெண்ணுக்கும், அவரது அக்காவுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த 2 போலீஸ் காரர்கள் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆண்ட்ரினா(25) காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "ஒரு கொலை வழக்கில் எனது கணவரின் பெயரை கிண்டி போலீஸார் சேர்த்தனர்.

வழக்கில் பெயர் இருப்பதை காரணமாக வைத்து கிண்டி போலீஸ்காரர்கள் செந்தில், மகேஷ் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தனர். பலமுறை எங்களிடம் பணம் வாங்கிச் சென்றுள்ளனர்.

எங்கள் வீட்டுக்கு வந்து என் கணவரிடம் மது பாட்டில்களை வாங்கி வரச்சொல்லி வீட்டிலேயே மது அருந்துவார்கள். பின்னர் நான் சமைத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு அங்கேயே படுத்து உறங்குவார்கள். இந்நிலையில் எனது கணவர் இல்லாத நேரத்தில் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். போலீஸ்காரர்களுக்கு நான் இணங்காததால் எனது கணவரை திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அக்காவுக்கும் தொந்தரவு

நான் எனது அக்கா வீட்டுக்கு சென்றதால் அங்கேயும் தொடர்ந்து வந்து, என்னிடமும், எனது அக்காவிட மும் இரு போலீஸ்காரர்களும் தவறாக நடந்து கொண்டனர். எங்களி டம் தவறாக நடந்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

போலீஸ்காரர்கள் மீதான புகாரைத் தொடர்ந்து உடனடியாக விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பெண் கூறிய புகார் உண்மை யெனில் இரு போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE