செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் என தொழில்நுட்ப உதவி யுடன் சட்டக்கல்லூரி மாணவர் களுக்கு மட்டுமின்றி நீதிபதிகளுக் கும் பல்வேறு சட்டங்கள் குறித்து வகுப்புகளை எடுத்து அசத்தி வரு கிறார் பார்வையற்ற பேராசிரியரான முனைவர் எஸ்.ஏழுமலை.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக்கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணிபுரியும் முனை வர் எஸ்.ஏழுமலை, பார்வையற்ற வர். ஆனால் இவரது பேச்சு, நடை, உடை ஆகியவை இவர் பார்வையற்றவர்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வகுப்பறைக்குள் நடந்து கொண்டே பாடம் நடத்துவது, கவனத்தை சிதறவிடும் மாணவர் களின் பெயர்களை சரியாக உச்ச ரித்து அவர்களை வழிநடத்துவது, மாணவர்கள் கேட்கும் கேள்வி களுக்கு துல்லியமாக பதிலளிப்பது என பிரமிக்க வைக்கிறார் பேராசிரியர் ஏழுமலை.
“பார்வையற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்குள் எப்போதுமே இருந்ததில்லை. 10-க் கும் மேற்பட்ட சட்ட விழிப்புணர்வு புத்தகங்களை எழுதியுள்ளேன். அதில் 7 புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளேன். உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணிபுரிந்த எனக்கு நீதிபதி எஸ்.விமலா, நீதி பதிகளுக்கும் பாடம் எடுக்கும் வாய்ப்பை வழங்கினார். அன்று முதல் இன்று வரை பல்வேறு ஊர்களுக்கும் சென்று நீதிபதிகளுக் கும், வழக்கறிஞர்களுக்கும் பல் வேறு சட்ட நுணுக்கங்கள் குறித்து வகுப்பு எடுத்து வருகிறேன். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக பதவி வகித்தபோது தொடங்கிய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு தற்போது இங்கு வந்து பணிபுரிகிறேன்” எனக்கூறும் பேராசிரியர் ஏழுமலையின் சொந்த ஊர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடிஅண்ணா மலை.
பேராசிரியர் ஏழுமலையின் தந்தை சர்க்கரை, தாயார் லட்சுமி விவசாயிகள். 3 வயதாக இருக் கும்போது மூளைக்காய்ச்சலால் பார்வையை பறிகொடுத்த ஏழு மலை, தனது விடாமுயற்சியால் இன்று சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் மட்டுமின்றி டெல்லி மற்றும் பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரிகளின் கவுரவ ஆசிரியராக உள்ளார். தேசிய உயிரி பல்வகைத் தன்மை (பயோ-டைவர்சிட்டி) ஆணையத்தின் நிபுணர்குழு உறுப்பினர், மாநில வாரிய உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். ஐநா சபை உடன்படிக்கைகளுக்கும் சட்டநிபுணராக திகழ்ந்து வருகிறார்.
இதுதொடர்பாக பேராசிரியர் எஸ்.ஏழுமலை ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
முனைவர் பட்டத்தை அப்துல் கலாமின் கையால் பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். பார்வை உள்ள படித்த பலருக்கும்கூட சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. விவசாயிகள் என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். மஞ்சள், கிராம்பு, கீழாநெல்லி போன்ற பாரம்பரிய மூலிகைகளையும், பண்டைய தமிழர்களின் கண்டு பிடிப்புகளையும் திருடும் மேலை நாட்டு கும்பல்களிடமிருந்து அவற்றைப் பாதுகாத்து தமிழர் களின் உரிமைகளை அறிவுப்பூர்வ மாக நிலைநாட்ட பாடுபட்டு வரு கிறேன்.
இதுவரை சிங்கப்பூர் நிறுவன விருது, முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவிடம் விருது, மத்திய வேளாண் துறை விருது என பல விருதுகள் கிடைத்துள்ளன. விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் இன்று பல விஞ்ஞானி களுக்கும், மருத்துவர்களுக்கும் சட்டரீதியாக ஆலோசனை வழங்கும் இடத்தில் உள்ளேன். சட்டத்தில் ஆழ்ந்த ஞானம் இருந்தால் போதும், வழக்கறிஞராக நீதிமன்றத்துக்குப் போய் வழக்காடி தான் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சர்வதேச நாடு களுக்கு சட்டப்பணியாற்றி மனநிறைவாகவே சம்பாதிக்கலாம். இதற்கு ஆண், பெண் என்ற எந்த பேதமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்வையற்றவர்களுக்கு உதவும் டாக்-பேக்!
பேராசிரியர் ஏழுமலையிடம் செல்போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டபோது, ‘‘முன்பு பிரெய்லி மட்டும்தான் பார்வையற்றவர்களின் தோழனாக இருக்கும். ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லோருடைய செல்போனிலும் ‘டாக்-பேக்’ என்ற வசதி உள்ளது. செல்போனுக்கு அழைப்பு விடுத்தது யார்? எப்போது அழைத்தார்? மின்-சட்டப் புத்தகத்தில் என்னென்ன பகுதிகள் உள்ளது என அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் கூறும் அந்த வசதியை பார்வையற்ற நாங்கள் எளிதாகப் பயன்படுத்துகிறோம். மற்றவர்கள் பயன்படுத்துவதில்லை. தமிழில் மொழிபெயர்த்து கூறுவதற்கும் தற்போது இ-ஸ்பீக் என்ற வசதி அறிமுகமாகியுள்ளது. கூகுளை ஆளத் தெரிந்தால் இந்த உலகை எளிதாக ஆளலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago