ஓடும் ரயிலில் பிறந்த நாள் விழா, திருமண தம்பதிகள், குடும்பத்தினர் சுற்றுலா செல்ல ஆடம்பரமான வசதி கொண்ட ‘ரயில் சலூன் கோச்’ மக்களின் பயன்பாட்டுக்கு, தெற்கு ரயில்வேயில் விரைவில் இணைத்து இயக்கப்பட உள்ளது.
விரைவு ரயில்களில் ரயில்வே உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த ‘சலூன் கோச்’ எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.
ஏற்கெனவே, ரயில்வே வாரியத் தலைவர், பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகிய உயர் அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது இந்த ‘சலூன் கோச்’-ஐ பயன்படுத்துவார்கள்.
ஏ.சி வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட இந்தப் பெட்டிகளில் வரவேற்பறை, 2 படுக்கையறைகள், கழிவறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வேயில் மொத்தம் 336 ‘சலூன் கோச்’கள் உள்ளன. அவற்றுள் 62 ‘சலூன் கோச்’களில் ஏசி வசதியுள்ளது.
இவை தற்போது படிப் படியாக ஐஆர்சிடிசியிடம் ஒப்ப டைக்கப்பட்டு, அதன்பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு கொண் டுவரப்படுகிறது. இதுவரையில் 8 சலூன் கோச்.கள் ஜெய்ப்பூர், கோவா, ஹவுரா உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படு கின்றன.
அடுத்தகட்டமாக தெற்கு ரயில் வேயில் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் சுற்றுலாவுக் காக ‘சலூன் கோச்’ இணைத்து இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக ரயில்களில் பயணம் செய்வதைக் காட்டிலும் இந்தப் பெட்டிகளில் மக்கள் பயணம் செய்யும்போது புதிய அனுபவத்தைப் பெற முடியும். படுக்கை அறைகள், ஓய்வறைகள், உணவகங்கள், கழிப்பறைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெட்டிகளில் சுற்றுலா பயணத்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களையும் செய்துள் ளோம்.
உள்ளே பயணம் செய்யும்போது வெளிப்புற அழகைப் பார்க்கும் வகையில் பின்புறம் கண்ணாடி யால் ஆன ஜன்னல்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 6 பேர் பயணம் செய்யலாம். இவர்களுடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.
இந்த ‘சலூன் கோச்’ஐ முன்பதிவு செய்து பயணம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தற்போது, இந்த வசதியை தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மக்களின் பயன் பாட்டுக்கு 2 மாதங்களில் கொண்டு வரவுள்ளோம். குறிப்பாக, சென் னையில் இருந்து மதுரை, தென்காசி, கேரளா, மைசூர், பெங்களூரு அல்லது பயணிகள் விரும்பும் இடங்களுக்கு இயக்க வுள்ளோம். 6 பேர் கொண்ட குழுவினர் செல்ல சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை ஆகும் என எதிர்பார்க்கிறோம்.
ஓடும் ரயிலில் பிறந்த நாள் விழா, திருமண தம்பதிகள், குடும்பத்தினர் சுற்றுலா பயணம், வணிக நிறுவனங்களின் கலந் தாய்வுக் கூட்டம் மற்றும் விழா கொண்டாட்டங்களை நடத்த லாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago