சிறப்பான செயல்பாடுகளுக்காக தமிழக அரசுக்கு 4 விருதுகள்: இந்தியா டுடே விருதை முதல்வர் பெற்றார்

சென்னை

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்காக ‘இந்தியா டுடே’ சார்பில் 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற முதல்வர் கே.பழனிசாமி, ‘இந்தியா டுடே’ இதழ் சார்பில் டெல்லியில் நடந்த விருது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசுக்கு ஒட்டுமொத்த செயல்பாடு, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் குறுகிய காலத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம், சுற்றுலா ஆகிய பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக் கான 4 விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து இந்த விருதுகளை பெற்றுக் கொண்ட முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதர மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பொருளாதார அளவில் வலுவான, நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. மனித வள குறியீட்டில் 2-வது சிறந்த மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வி சேர்க்கையில் எப்போதும் முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 7 கோடியே 20 லட்சம் மக்களில் 80 சதவீதம் பேர் கல்வி யறிவு பெற்றவர்கள். 50 சதவீதத் தினர் நகர்ப்புறத்தில் வாழ்கின்ற னர். மேலும் தமிழகம், புதுமை அடிப்படையிலான பொருளாதாரத்துடன், உற்பத்தி மற்றும் சேவை யில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக உள்ளது.

சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதால் தமிழகம் அமைதியின் சொர்க்கமாக உள் ளது. சட்ட அமலாக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தை அவ்வப்போது புகுத்தி வருகிறது. சிசிடிஎன்எஸ் அமைப்பு சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளதால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகம் அதிக அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கலாச்சார சுற்றுலா மையங்கள், பழமையான கோயில்கள், பாரம்பரிய மையங்கள், இயற்கை அழகு மற்றும் சாகசப்பகுதிகள் நிறைந்த இடமாக உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை மற்றும் சக அமைச்சர்கள், எம்பிக் கள்,எம்எல்ஏக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றுக்காகவே இந்த விருதுகள் வழங்கப்பட் டுள்ளன.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE