கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலை கொண்டிருப்பது அரிய நிகழ்வு என தனியார் வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
கஜா புயல் நேற்றிரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த மழை பெய்தது.
இது குறித்து வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கரையைக் கடந்த பின்னரும்கூட கஜா புயல் தீவிர புயலாகவே இருக்கிறது. தற்போது கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது. இது மிகவும் அரிய நிகழ்வு. புதுக்கோட்டையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசியது.
புயல் கடக்கும்போது நிலவிய காற்றின் வேகம்:
அதிராமப்பட்டினம் - 111 km/hr (0230 IST)
நாகப்பட்டினம் - 100 km/hr (0230 IST)
காரைக்கால் - 92 km/hr (0130 IST)
மீனம்பாக்கம் - 122 km/hr,
நுங்கம்பாக்கம் - 114 km/hr
எண்ணூர் - 89 km/hr
வர்தா புயலுக்கு நிகராக காற்றின் வேகம் இருந்துள்ளது.
எங்கெல்லாம் சூறைக்காற்று வீசுகிறது? (புயலின் வடக்கு பகுதியால் ஏற்படும் தாக்கம்)
புதுக்கோட்டை, வட சிவகங்கை, தென் திருச்சி, தெற்கு கரூர், திண்டுக்கல், மதுரையின் வடக்கு பகுதி, தேனியின் சில பகுதிகளிலும் சூறைக் காற்று வீசுகிறது. இந்த மாவட்டங்களில் எல்லாம் இப்படி சூறைக் காற்று வீசுவது அரிய நிகழ்வாக இருக்கப்போகிறது.
எங்கெல்லாம் கனமழை? (புயலின் தென்பகுதியால் ஏற்படும் தாக்கம்)
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் உள்ளவர்கள் வீட்டில் இருப்பது சிறந்தது.
பலத்த மழை எங்கெங்கு பெய்யும்?
திருச்சி, கரூரின் சில பகுதிகள், வால்பாறை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடக்கு, கிழக்கு ராமநாதபுரம் மாவட்டங்களிலும் தூத்துக்குடியின் வடக்கு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மாலையில் கஜா புயல் கேரளாவை நோக்கி நகர்ந்துவிடும்.
கேரளாவில் மழை எப்படி இருக்கும்?
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நல்ல மழை பெய்யும். மூனாறில் விடுமுறைக்குச் சென்றவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இடுக்கி மாவட்டத்தில் கண்காணிப்பு அவசியம். எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago