பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் திருநங்கைகளுக்கு சிக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி முனைவர் ஐ.ஜெயந்தி. திருநங்கைகளை கேலிப்பொருளாகவும், காமப் பொருளா கவும் பார்க்கும் இந்த சமூகத்துக்கு மத்தியில், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ தன்னால் முடிந்த உதவிகளை இவர் செய்து வருகிறார்.
திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என ஒவ்வொரு கூட்டத்திலும் அறிவுரை கூறும் இந்த நீதிபதி, போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் இதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களுடன் கரம் கோர்த்துள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வாரம் தோறும் திருநங்கையர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வாழ்வியல் போதனைகளுடன் போதித்து வருகிறது. இதனால் திருநங்கையர் இவரை ‘சிஸ்டர்’ என அழைக்கும் அளவுக்கு அவர்கள் மத்தியில் ஒரு தோழியைப் போல நெருக்கமாகியுள்ளார்.
திருநங்கையர் சிலர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இதுபற்றி கூறும்போது, “கடந்த 2016-ம் ஆண்டு பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் தீக்காயங்களுடன் உயிரிழந்த திருநங்கை தாராவையும், அந்த மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடிய எங்களைப் போன்ற திருநங்கைகளையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. தாராவின் இறப்புச்சான்றிதழ் பெற நாங்கள் அலையாத அலைச்சல் கிடையாது. இறுதியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி ஜெயந்தியம்மாவை தொடர்பு கொண்டு தெரிவித்தோம். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு 2 மணி நேரத்தில் தாராவின் இறப்புச்சான்றிதழை பெற்றுக் கொடுத்தார். அதேபோல அம்பத்தூர் திருநங்கை கனிமொழிக்கு ஆதார் அட்டை வழங்க அதிகாரிகள் மறுத்தபோதும், அவர் உதவி செய்து ஆதார் அட்டையை பெற்றுத் தந்தார். இதுபோல எத்தனையோ திருநங்கைகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் பெறவும், இலவச கல்வி, இலவச சட்ட உதவி, நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு என அவர் சத்தமில்லாமல் உதவி வருகிறார்” என்றனர்.
இதுதொடர்பாக முனைவர் ஐ.ஜெயந்தியிடம் கேட்டபோது, ‘‘ மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதல் பணியே இலவச சட்டஉதவி தேடும் ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டுவது தான். கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருநங்கைகளுக்கு உதவுவதை கூடுதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட அவர்களுக்குத்தான் உதவிகள் அதிகம் தேவை. இதற்காக எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனங் கள், அரசு அதிகாரிகளையும் கண்டிப்பாக நினைவு கூற வேண்டும். திருநங்கையருக்கு வீடுகள் கொடுக்க பலர் தயங்குகின்றனர். அதையும் மீறி சிலர் வீடுகளை வாடகைக்கு விட்டாலும் அதிக வாடகை கேட்கின்றனர். இதனால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மாநகராட்சி காப்பகம் மீண்டும் முழுவீச்சில் செயல்படுவதற்கும், அவர்களையும் இந்த சமூகத்தில் தலைநிமிரச் செய்வதற்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். பொதுவாக நீதிமன்றம், நீதிபதி என்றாலே எல்லோருக்கும் ஒருவித பயம், மரியாதை கலந்த தயக்கம் இருக்கும். அந்த தடை நீங்கினால் மட்டுமே சட்டத்தின் முழுபலனும் அடித்தட்டு மக்களை சென்றடையும் என்பதால் உதவி என தேடி வருபவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் எங்களது சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் எந்நேரமும் திறந்தே இருக்கும்’ என்றார்.பொதுவாக நீதிமன்றம், நீதிபதி என்றாலே எல்லோருக்கும் ஒருவித பயம், மரியாதை கலந்த தயக்கம் இருக்கும். அந்த தடை நீங்கினால் மட்டுமே சட்டத்தின் முழுபலனும் அடித்தட்டு மக்களை சென்றடையும் என்பதால் உதவி என தேடி வருபவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் எங்களது சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் எந்நேரமும் திறந்தே இருக்கும்.
;
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago