தமிழக அரசு உத்தரவிட்டும் கோயில் களுக்கு சொந்தமான நகைகளைப் புகைப்படம் எடுப்பது, தனி அடை யாள எண் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பணிகள் கடந்த 2 ஆண்டு களாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், தமிழக அரசிடம் மதிப் பீடு அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை தயக்கம் காட்டிவருகிறது.
தமிழகம் முழுவதும் 36 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 47 முதுநிலை கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நகை மதிப்பிடும் பணியை மேற்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
கோயில் ஊழியர்கள், அதி காரிகள் நகைகளை கையாடல் செய்து விடக் கூடாது என்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட விவரங் களை அறிக்கையாக தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்படி, நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் அறிக்கையோடு ஒப்பிட்டு, நகை களின் அளவை உறுதிசெய்யும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களின் நகை மதிப்பீடு அறிக்கை அரசு செயலருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அரசு செயலர் ஏற்கவில்லை. ‘பாது காப்பை உறுதி செய்ய முதுநிலை கோயில்களில் உள்ள நகைகள் ஒவ்வொன்றையும் கேமரா மூலம் புகைப்படம் எடுக்க வேண்டும், ஒவ்வொரு நகைக்கும் தனித்துவ மான அடையாள எண் வழங்க வேண்டும். அப்போதுதான் மதிப் பீடு அறிக்கை ஏற்றுக்கொள்ளப் படும்’ என்று கூறி, இந்து சமய அறநிலையத் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நகை மதிப்பிடும் நிபு ணர்களைக் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்களின் மூலம் முதுநிலை கோயில்களில் உள்ள நகைகளைப் புகைப்படம் எடுத்து ஆல்பம் தயார் செய்வது, தனி அடையாள எண் ஒதுக்கு வது உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்தக் குழுக்கள் செயல்படவே இல்லை. புகைப்படங் கள் எடுக்க கேமராக்கள் வாங்குவது, தனி அடையாள எண் ஒதுக்குவது உள்ளிட்ட எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இத னால், அரசுக்கு அறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறை தயக்கம் காட்டிவருகிறது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒரு வர் கூறும்போது, ‘‘முதுநிலை கோயில்களில் ஒவ்வொரு ஆண் டும் நகை மதிப்பிடும் பணிகளைத் தவறாமல் மேற்கொள்கிறோம். அரசு செயலர் உத்தரவை நிறை வேற்றாததால் அறிக்கையை தாக் கல் செய்யாமல் இருந்து வருகி றோம்.
காலிப் பணியிடங்களால் இந்த உத்தரவைச் செயல்படுத்து வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், விரைவில் கேமராக் கள் வாங்கி, நகைககளின் புகைப் பட ஆல்பம் தயாரிப்பது, அடை யாள எண் ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago