தீபாவளியை முன்னிட்டு போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இணைந்து வாட்ஸ்அப் குழு அமைத்து தமிழகம் முழுவதும் வாகனப் போக்குவரத்தை கண் காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் வசித்து வருபவர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் திரும்பி வருகின்றனர். அதன்படி சென்னையில் படிப்பு, வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில் மற்றும் கார்கள் மூலம் திரும்பிச் செல்கின்றனர்.
நெரிசலைக் குறைக்கும் வகை யில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், மாதவரம் பணிமனை பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பேருந்து நிறுத்தம், தாம்பரம் சானிட் டோரியம் பேருந்து நிறுத்தம், தாம்பரம் ரயில் நிலையம் அருகில், கே.கே.நகர் பேருந்து பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற் பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்று விட்டனர்.
அதிகாரிகள் ஆலோசனை
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையம் செல்வதாலும், இவர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, சிஎம்டிஏ மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை அதி காரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தங்களுக் குள் வாட்ஸ்அப் குழுவை அமைத் துள்ளனர். இந்தக் குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போக்குவரத்து அதிகாரி கள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். பேருந்துகள் எங்கிருந்து? எந்த மாவட்டத்துக்கு? எத்தனை பேருந்து கள் புறப்பட்டுள்ளன, எந்த நேரத் தில் புறப்பட்டு உள்ளது, அதில் எத்தனை பயணிகள் பயணிக்கின் றனர் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள் கின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கின் றனர். குறிப்பாக காலியாக உள்ள பேருந்துகளை நகரின் வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தி உள்ளனர்.
மினி கட்டுப்பாட்டு அறை
பேருந்து முழு கொள்ளளவை எட்டிய உடன் அடுத்த பேருந்து, பேருந்து நிலையத்துக்குள் நுழை யும் வகையில் நடவடிக்கை எடுத் துள்ளனர். இதற்காக சிஎம்டிஏவில் தற்காலிக மினி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் 30 போக்குவரத்து காவல் ஆய் வாளர்கள், 117 உதவி ஆய்வாளர் கள் 500-க்கும் மேற்பட்ட போக்கு வரத்து காவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, “வெவ்வேறு மாவட்டங் களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒரே இடத்தில் இருந்து புறப்பட்டால் நெரிசல் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சென்னையில் வெவ்வேறு இடங்களில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகளின் செயல்பாட்டி னைக் கண்காணிக்க போக்கு வரத்து மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்குள் வாட்ஸ் அப் குழு அமைத்துள்ளோம். போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டால் அதிக நேரம் ஆகும் என்பதாலும் மற்ற அதிகாரிகளுக்கு அந்த தகவல் தெரியாது என்பதா லும் அனைவரும் இணைந்து வாட்ஸ்அப் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்கி றோம். இது நல்ல பலன் தந்துள் ளது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago