புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர், அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் நேற்று திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புயலால் நனைந்த புத்தகங்கள், பை, சீருடைகளுக்குப் பதிலாக புதிய புத்தகங்கள், பைகள், சீருடைகள் அரசால் வழங்கப் பட்டன.

இந்த பணிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகளையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர் நேற்று மோட் டார் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு, அவர் விருந்தினர் மாளிகைக்குச் சென்றுகொண்டிருந் தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி துரை.திவ்யநாதனின் வீட்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினரின் ஏராளமான வாகனங்கள் நின்றன. புயல் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் பணி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு, காங்கிரஸ் கட்சி யின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் காரும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் திருநாவுக்கரசர் வந்திருக்கிறாரா எனக் கேட்டு அவர் வந்திருப்பதை உறுதி செய்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியினரே எதிர்பாராத வகையில் திவ்யநாதனின் வீட்டுக்குள் சென்றார். அங்கு, ஒரு அறையில் கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்து சுமார் 5 நிமிடங்கள் பேசினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை வாசல் வரை வந்து திருநாவுக்கரசர் வழி அனுப்பினார். அப்போது, கஜா புயல் பாதிப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. எனினும், இருவரும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்